உபி மாநிலம் பரேலி பகுதியில் வசிப்பவர்கள் ரேஹான் மற்றும் அவரது நண்பர்ஷாருக், சம்பவத்தன்று நந்தன்சிங் என்பவரது வீட்டுச்சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்ததை கண்ட நந்தன்சிங்கும் அவரது குடும்பத்தினரும், இருவரும் தங்களது வீட்டிற்கு திருட வந்திருப்பதாக நினைத்து அடித்து உதைக்க தொடங்கியுள்ளனர்.
அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நந்தன்சிங் குடும்பத்தினர் இருவரையும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ரேஹான், பரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மேல் சிகிச்சைக்கு வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் மருத்துவமனைக்கு போகும் வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் இறந்திவிட்டார், உடற்கூராய்வு தகவலின்படி ரேஹானுடைய தலையில் பலமான பொருளை கொண்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இந்நிலையில் அவரது நண்பர் ஷாருக் பலத்த காயங்களுடன் இன்னும் சிகிச்சையில் உள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் தன் கணவரை அடித்துக்கொன்ற நந்தன்சிங் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கப்பதிவு செய்துள்ளார் ரேஹானின் மனைவி சபா.
இபிகோ பிரிவின் 307,323,302 ஆகிய வழக்கு எண்களின் படி நந்தன்சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் இருவரை கைது செய்துள்ளதாக பரேலி சுப்பிரடண்டன்ட் சங்கல்ப் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சி ஷாருக் இருப்பதால் தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.