Kashmir

காஷ்மீர் சிறுமியை கடத்த முயன்ற மூன்று பாதுகாப்பு படையினர் கைது..

வடக்கு கஷ்மீரின் பந்திப்பூரா சேர்ந்த சேவா எனுமிடத்தில் ஒன்பது வயது சிறுமியை கடத்தி ஒழித்து வைத்திருந்த வழக்கில் மூன்று இராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யபட்டுள்ளனர்.

கஷ்மீரின் உள்மாநில பத்திரிக்கையான கஷ்மீர்வல்லா எனும் நாளேட்டில் இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின்படி அவர்களின் பெயர்கள் சுபேதார் ஹர்பஜன் சிங், நாயக் அமித் தாக்கூர் மற்றும் ஹவால்தார் மன்சூர் அஹமத் என்பது தெரியவந்துள்ளது.  இவர்கள் மீது இபிகோ செக்‌ஷன் 15/2021ன்படி 341, 363, 511 ஆகிய எண்களின் கீழ் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் , சும்பால் காவல் நிலையமதில் அளித்த புகாரின் பெயரில் இவர்களை கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

பிப்ரவரி 10 ஆம் தேதி பாண்டிபோராவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மாருதி ஆல்டோ கார் ஒன்று சிறுமிக்கு அருகே சாலையில் நிறுத்தப்பட்டது. காரில் இருந்த ஒருவர் அவளுக்கு ரூ .500 நோட்டை வழங்கினார், ஆனால் சிறுமி பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.

“அவள் ஓட முயன்றபோது, வாகனத்தில் இருந்த ஒரு சிப்பாய் காரில் இருந்து இறங்கி சிறுமி கையைப் பிடித்தான். என் மகள் உதவிக்காக அழுதார், ”என்று சிறுமியின் தந்தை அப்துல் மஜித் கூறுகிறார்.

மகளின் அலறல் சத்தம் சாலையில் இருந்தோர் கவனத்தை ஈர்த்தது, உடனே அங்கு இருந்தோர் குற்ற செயலில் ஈடுபட்டோரின் காரைச் சுற்றி வளைத்தனர். “நான் சில வேலைக்காக வெளியே சென்று இருந்தேன். [குற்றம் நடந்த இடத்தில்] அதிர்ஷ்டவசமாக எனது ஓட்டுநர் நண்பர் இருந்ததால் எனது மகளை அடையாளம் கண்டு எனக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார், ”என்று சிறுமியின் தந்தை மஜித் கூறுகிறார்.

தினக்கூலி தந்தையாகிய தம்மால் இங்கு என்ன நடக்கிறது என ஊகிக்க கூட முடியவில்லை, கடவுள் அருளால் என் மகள் பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் இம்மூவரும் அவளை வழிமறித்து கடத்தியதை கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்த காரணத்தால் இவர்கள் மீது என்னால் புகாரளிக்க முடிந்தது. அவர்கள் உபயோகித்த  மாருதி ஆல்டோ காருக்கு மூன்று விதமான நம்பர் பிளேட்டுகளை உபயோகித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு :

இதுகுறித்த கஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெஹபூபா முஃப்தி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் முழு கஷ்மீரின் நிம்மதியும் நாசமாக்கப்பட்டு, மக்களை பாதுகாக்க வேண்டிய இராணுவ வீரர்களே சிறுமிகளை கடத்துவதும், அவர்களை கற்பழிக்க முயல்வதும் அராஜகத்தின் உச்சம் எனவும், சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட நிலையில் புகாரளித்திருக்கும் சிறுமியின் பெற்றோரை அளித்த புகாரை வாபஸ் பெற கூறியும் மிரட்டுவதும் கஷ்மீர் நரகின் வாயிலில் நிற்பதாக உணருகிறோம் என கண்டித்திருந்தார்.

பந்திப்புராவின் சீனியர் சூப்பிரண்டன்ட் ராகுல் மாலிக் இதுபற்றி கருத்து தெரிவித்தபோது வழக்கினை வாபஸ் வாங்க யாரும் மிரட்டுவதாக எங்களுக்கு புகார் வரவில்லை, மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்ட மூவரையும் பெயிலில் விடாத சட்டத்தில் தான் கைது செய்துள்ளோம் என்றார்.