Crimes Against Women Uttar Pradesh

உ.பி : கை, கால் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகளின் உடல்கள் சடலமாக மீட்பு..

தலைமை பூசாரி ஆளும் மாநிலமான உபி யில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் உபி உன்னாவோவில் புதன்கிழமையன்று வயலில் இறந்த நிலையில் இரு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், உ.பி. காவல்துறை இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாபுரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுமிகள் தங்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுத்து வர வயலுக்கு சென்றிருந்தனர். மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராதபோது குடும்பத்தார் அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது வயலில் மூன்று சிறுமிகளும் கை கால்கள் கட்டப்பட்டு கீழே கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி உற்றனர். ஆனால் உபி போலிஸ் தரப்பு அதை மறுத்துள்ளது.

ஆர்மபத்தில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த போலீசாருக்கு எதிராக ஊர் மக்கள் கூடி போராட்டம்

இருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நபர் ஆபத்தான நிலையில் தற்போது கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். 3 சிறுமிகளுக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தையை உபி போலீசார் மறைவான இடத்திற்கு மாற்றி உள்ளனர்.

இபப்டி உபி யில் தொடர் கதையாக பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரித்து வந்தாலும் பாஜக வை சேர்ந்தவர்கள் ஒருபோதும் வாய் திறக்காதது ஏன் என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.