பிரதமர் நரேந்திர மோடியை குறித்து வீடியோ ஒன்றில் அவதூறு உள்ளதாக கூறி, உத்தரபிரதேச வாரணாசியில் உள்ள காவல்துறையினர் கடந்த வாரம் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் மற்றும் 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர், பிறகு இது குறித்த செய்தி வெளியானதும் மேற்குறிப்பிட்டோரின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் இருந்து காவல்துறை அதிகாரிகள் நீக்கினர்.
இந்த வழக்கில் “சம்பந்தப்படவில்லை” என்று கண்டறியப்பட்ட பின்னர் சுந்தர் பிச்சை மற்றும் மூன்று கூகிள் உயர் அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன, என வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் தொலைபேசியில் பி.டி.ஐ யிடம் தெரிவித்துள்ளார்.
5 லச்சத்திற்கும் அதிகமான தடவைகள் யுடியூப் மற்றும் வாட்ஸ் அப்பில் பார்க்கப்பட்ட மோடி அவதூறு வீடியோ குறித்து மாற்று கருத்து தெரிவித்தது முதல் இது வரை 8500 மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உபி பெலூபூர் காவல் நிலையத்தில் 504,500, 500, 120B ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபி யில் கும்பல் பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை என அதிகரித்து வருகிறது, இதை எல்லாம் தடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்காமல் இதற்கெல்லாம் வழக்கு போட்டு கொண்டுள்ளனர் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.