ஹஜ் புனித பயணத்தின் போது மெக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்து வருவதை உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் .கடந்த ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் குழு AI966 (ஜித்தா / ஹைதராபாத் / மும்பை) மற்றும் AI964 (ஜித்தா – கொச்சின்) விமானங்களில் ஜம் ஜம் நீர் கேன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்து இருந்தது. இது குறித்து தமிழில் newscap.in செய்தி வெளியிட்டு இருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்த அறிவிப்பை தற்போது திரும்ப பெற்றுள்ளது .
புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. ஹஜ் பயணம் மேற்கொண்ட இரு ஏர் இந்தியா விமானங்களில் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகள் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என ஏர் இந்தியா இன்று வெளியிட்ட விளக்கத்தில் தெரிவித்து உள்ளது