BJP Haryana

கள்ளக் காதலியைக் காணச் சென்று காலை உடைத்துக் கொண்ட பா.ஜ.க பிரமுகர்!

51 வயதான சந்தர் பிரகாஷ் கதூரியா ஹரியானா பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர். அம்மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், கர்னால் தொகுதியில் கடந்த 2019 ஆம் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகவும் போட்டியிட்டவர் கதூரியா.

கடந்த வெள்ளியன்று சண்டிகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணைக் காண சென்றுள்ளார் கதூரியா. அப்போது வீட்டில் திடீரென காலிங் பெல் ஒலிக்கவே, ஒரு துணியை கொண்டு இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து தப்பிக்க முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு தரைத்தளத்தில் விழுந்து கிடந்தார்.

அமித் ஷாவுடன் கதூரியா

விழுந்த அவர் கையும் களவுமாக பிடிபட்டார், எனினும் பாஜக கட்சி பிரமுகர் என்பதாலோ என்னவோ அவர் தாக்கப்படவில்லை. அவர் சிகிச்சைக்காக முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியகத்தில் (பிஜிஐஎம்இஆர்) அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சண்டிகர் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாஜக தலைவர் செக்டர் 63 இல் உள்ள தனது பெண் நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தாகவும், அப்போது திடீரென மற்றொருவர் வருவதை உணர்ந்த அவர் இரண்டாவது மாடியில் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்து காயமடைந்ததாகவும்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து , கட்சியின் மாநில செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளரான கதுரியாவை நேற்று அம்மாநில மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

https://www.youtube.com/watch?v=V4mA7Mutvc4&feature=youtu.be