அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் (ESMA)-வை நிறைவேற்றியதன் மூலம் அரசு நிறுவனங்களும், துறைகளும் ஆறு மாத காலத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில பாஜக அரசு. இதை மீறுவோரை வாரண்ட் இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களின் ஒப்புதலோடு, கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலும், ஏழு வகையான கொடுப்பனவுகள் (Allowances) வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்ட நிலையிலும் கோவில் தலைமை பூசாரியான அஜய் பிஷ்த் சிங் தலைமையிலான பாஜக அரசு இந்த குறிப்பாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.