சிக்கிம் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில் சீனா அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் லடாக்கின் வடக்கு பாங்கோங் த்சோ பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியா சாலை பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இன்னொரு பக்கம் கடந்த சனிக்கிழமை வடக்கு சிக்கிமின் நாகூலா பகுதியில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு காயமடைந்தனர். அன்று முதல் எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் கூடுதலாக வீரர்களை எல்லைகளில் குவித்து வருகிறார்கள்.
இந்திய எல்லை பகுதியில் மோட்டார் படகுகள் மூலம் அத்துமீறிய சீன படைகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதோடு, பாங்கோங் த்சோ பகுதியிலும் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலும் சீனா தனது படைகளை (சுமார் 5000 நபர்கள்) வேகமாக குவித்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்களை மட்டும் பெரிது படுத்தி விவகாரம் ஆக்கும் மோடியாக்கள், சீனாவின் அத்துமீறல்கள் குறித்து பெரிய அளவில் வாய் திறப்பதில்லை. இந்நிலையில் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை காக்குமா மோடி அரசு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.