திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான
இன்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர்கள் நீதிபதி ஆக முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சையில் தான் என்ற கருத்துப்பட பேசி இருந்தார்.
இது சர்ச்சை ஆனதை அடுத்து அதற்கு வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதை தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான விசாரணை முடிந்து உத்தரவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ் பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த ஆர்.எஸ் பாரதி மீதான மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது” என்று பதிவிட்டுள்ளார்.