Corona Virus

அர்னாப் கோஸ்வாமியை விசாரித்த போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி; கவலையில் வலதுசாரிகள் ..

முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பவராகவும், மோடியின் பக்தராகவும் விமர்சிக்கப்படும் அர்னாப் கோஸ்வாமி, ரிபப்லிக் தொலைக்காட்சி நிறுவனர் ஆவார். இந்த சேனலின் மூலம் விவாதம் நடத்துகிறேன் என்ற பேரில் அனுதினமும் கலவரத்துக்கு இணையான சூழலை ஸ்டுடியோவுக்கு உள்ளேயே உருவாக்கும் திறன் படைத்தவர் அர்னாப், சங்கிகளின் ஹீரோவாக அறியப்படுபவர்.

சமீபத்தில் மஹாராஷ்டிரா பால்கர் கும்பல் கொலை வழக்கில் அர்னாப் கூறிய விஷ கருத்துக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த அவரது மிகவும் மட்டமான கருத்துக்களுக்காக கோஸ்வாமியை ஏப்ரல் 28 அன்று 12 மணி நேரத்திற்கும் மேலாக பொலிசார் விசாரித்தனர்.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமியை விசாரித்த குழுவில் அங்கம் வகித்த இரண்டு மூத்த மும்பை காவல்துறை அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது கோஸ்வாமியின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அர்னாப் கோசுவாமிக்கு கொரோனா ஏற்பட்டு விடுமோ என்று வலது சாரிகளும், சங்கிகளும் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பொய் செய்திகளுக்கும், தொடர் மத வெறுப்பு செய்திகளக்கும் பெயர் போன opindia என்ற இணையத்தளம் இது குறித்து வெளியிட்ட ஆக்கத்தில் வலதுசாரிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் காவலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது அர்னாபின் விசாரணை நடத்திய பிறகு தான் காவலருக்கே தெரியவந்துள்ள நிலையில், அர்னாபை கொரோனா நோயாளியாக ஆக்கத்தான் இவ்வாறு சதி செய்யப்பட்டுள்ளது என்று மூளைவறண்ட வாதங்களை சங்கிகள் வைத்து வருகின்றனர்.

https://twitter.com/ashuraaaaaaaaa/status/1259735565517246464

உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமியின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஏப்ரல் 14 அன்று பாந்த்ரா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புதிய எஃப்.ஐ.ஆருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்தார். அர்னாபை அச்சுருத்தவே இவ்வாறான தந்திரங்கள் கையாளப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பால்கர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சால்வே வாதிட்டார், இருப்பினும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இதை எதிர்த்தார்.

சோனியா காந்தி குறித்து கீழ்த்தரமான கருத்தை ஊடகவியலாளர் என்ற போர்வையில் இவர் தெரிவித்தது காங்கிரஸ் தொண்டர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையே முகம் சுளிக்க வைத்தது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் என பல்வேறு மாநிலங்களில் அர்னாபின் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்ட நிலையில் இந்த அனைத்து எப்ஐஆர் களையும் இணைத்து ஒரே வழக்காக கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.