சவுதி அரேபியாவில் வசித்துவரும் முஸ்லிமல்லாத இந்தியர் ஒருவரை அந்நாட்டு குடிமகன் ஒருவர் கடுஞ் சொற்களைக் கொண்டு வசைபாடி உள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் சவுதி குடிமகன் ஒருவர் இந்தியர் ஒருவரை இழிவாக பேசி, நீ ஏன் முஸ்லிமாக இல்லை, நீ ஏன் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வில்லை என முட்டாள்தனமாக ஏசி பேசுவதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ வைரலாலானதை தொடர்ந்து, ‘இது குறித்து விசாரணையை துவக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் என்ற பேரில் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு எதிராக, சவுதி பிரஜை ஏசி பேசியுள்ளார். இவரை கைது செய்யப்பட வேண்டும்’ என்று சவுதி பிராசிகியுட்டர்கள் தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சவுதி பிரஸ் ஏஜென்சி மற்றும் கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி பிரஜையோ, குடியிருப்பாளரோ எவரின் சுயமரியாதைக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டாலும், எந்த சாக்குபோக்குக்கும் இடம் அளிக்கப்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு வழக்கறிஞர்கள் இவ்வாறான சம்பவங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வெளியிட்ட மோடி ஆதரவாளர்:
மோடி ஆதரவாளராக அறியப்படும் வலதுசாரி சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் இந்த செய்தியை மேற்கோள்கட்டி ‘உங்களின் ஒரு பாலோவராக இதை கேட்டுக்கொள்கிறேன். இதோ மோடி ஜி இந்து ஒருவரை வசைபாடியதற்காக சவுதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நம் நாட்டிலும் இது போன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லீம் நாட்டை விடவும் சிறந்து செயல்படுவீர்கள் என நம்புகிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவிலும் இஸ்லாமோபிபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதரவு வைக்கிறேன் என பதிவிட்டு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.