உத்தரபிரதேசத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூறிய செய்தி வெளியான ஓரிருநாட்களில் மீண்டும் ஒரு உபி மாநில பாஜக எம்எல்ஏ முஸ்லீம் வியாபாரி ஒருவரை இழிவாக பேசி மிரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்பு பிரச்சாரம், பொய்யான அவதூறு சுமத்தல் ஆகியவற்றில் இந்தியாவில் முதலிடம் உ.பி என்று விமர்சனம் செய்யப்படும் நிலையில் அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ள வீடியோ ஒன்றில் உ.பி.யின் மஹோபா மாவட்டத்திம், சர்காரி நகரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரிஜ்பூஷன் ராஜ்புத், முஸ்லீம் காய்கறி விற்பனையாளர் ஒருவரை அவரது மகனின் கண் முன்னே கேவலப்படுத்துகிறார்.
மேலுள்ள காணொளியில் காய்கறி விற்பவரிடம், ‘ உன் பெயர் என்ன என்று கேட்கிறார் பாஜக எம்,எல்.ஏ அதற்கு ராஜ்குமார் என்கிறார் அவர், உன்மையை சொல் இல்லனா அடிச்சே உன்னை வழிக்கு கொண்டு வந்துருவேன் என சட்டவிரோதமாக பாஜக எம்.எல்.ஏ மிரட்டுகிறார்.
பிறகு தள்ளுவண்டியில் அமர்ந்திருக்கும் அவரது மகனைநோக்கி “உன் அப்பனின் நிஜ பெயரை சொன்னா உங்கப்பன் தப்பிப்பான்” என எம்.எல்.ஏ மிரட்டவே “என் அப்பா பெயர் அசீசுதின் என்கிறார். உடனே அவரது மகன் கண் முன்னரே தந்தையை இழிவாக பேசி கேவலப்படுத்துகிறார். மகன் எம்.எல்.ஏ விடம் தனது தந்தையை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார், பிறகு அங்கிருந்து இருவரும் செல்கின்றனர்.
வீடியோவின் இறுதியில் “ஆஜ் கே பாத் மொஹல்லே மேன் திக் நா ஜானா தும் லோக் … நஹி தொமார் மார் கே தீக் கார்டேங்கெ (இனி இந்த எறியப்பக்கமே எட்டி பாக்கக்கூடாது, இல்லைனா அடிச்சு துவைச்சு சரி பண்ணிடுவோம்)” என்று ராஜ்புத் சொல்வதைக் கேட்கமுடிகிறது.
முஸ்லீம் வியாபாரியின் பொய்:
யோகி ஆத்தியநாத் ஆட்சிக்கு வந்தது முதல் அம்மாநிலத்தில் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. தற்போது லாக்டவுனும் அமலில் உள்ளது. உண்ண உணவின்றி ஏழை மக்கள் தவிக்கின்றனர். இதில் முஸ்லிம்கள் அதிகமான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர், காரணம் முஸ்லிம்கள் காய்கறி, பழங்களில் கொரோனா பரப்புகின்றனர் என்ற பொய்யான, மத வெறி பிரச்சாரம் தான்.
இதனால் தான் தன் பெயர் ராஜ்குமார் என்கிறார் அந்த நபர், முஸ்லீம் என தெரிந்தால் வாழவே விடமாட்டார்கள் என்ற அச்சம் தான் இவரை இவ்வாறு பெயர் மாற்றி சொல்லவைத்துள்ளது என்கின்றனர் விமர்சகர்கள்.
பாஜக எம்.எல்.ஏ வின் பொய்:
பாஜக எம்.எல்.ஏ வின் இந்த கீழ்த்தனமான நடவடிக்கை அடங்கிய இந்த காணொளி வைரல் ஆகவே, இதில் உள்ளது நான் தான்,வியாபாரி பொய் பேசியதால் தான் மிரட்டினேன். மேலும் அவர் கையுறை, முகவுரை இன்றி காய்கறி விற்பனை செய்தார் எனவும் கூறினார். எனினும் பாஜக. எம்.எல்.ஏ சொல்வது பொய், காய்கறி விற்பனையாளர் முகக்கவசம் அணிந்து உள்ளதை வீடியோவிலேயே காண முடிகிறது.
உண்மையில் கிளவுஸ், மாஸ்க் எதுவும் அணியாமல் கையில் தண்ணீர் பாட்டிலுடன் அடாவடியில் ஈடுபடுவது பாஜக எம்.எல்.ஏ தான் என்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.