கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது.கடும் விமர்சனங்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் நரோட்டம் மிஸ்ராவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு.
காலில் போட்டு மிதிக்கப்பட்ட சமூக விலகல்:
பதவி கிடைத்த சந்தோஷத்தில், வெற்றிக்கோலம் பூண்டு நரோட்டம் மிஸ்ரா, அவரது சொந்த ஊரான டாடியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் என அனைவரும் தடால்புடால் வரவேற்பு அளித்தனர். இங்கு நாடே கொரோனா வைரசால் அல்லோல்லப்பட்டு கொண்டிருக்க, சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல், முக கவசமும் அணியாமல் பாஜக அமைச்சர் பொறுப்பற்று செயல்பட்டுள்ளார்.
கூட்டம் மிகவும் நெருக்கமாக நிற்க, அமைச்சரின் குடும்பத்தார் பூஜை செய்து, அமைச்சருக்கு திருநீர் வைத்து, இனிப்பை ஊட்டிவிடுகின்றனர். எனினும் இந்த காணொளி வைரல் ஆகவில்லை. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறான நிகழ்ச்சியில் பங்கெடுத்துளளது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் சூழலை சுகாதாரத்துறை அமைச்சரே உருவாக்கியுள்ளார்.
உறங்கி போன மோடியாக்கள்:
நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயம், கூட்டம் கூட கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய பிரதேச அரசும் இதே செய்தியை தான் கூறுகிறது, இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து கொண்டு கொரோனா லாக்டவுன் விதிமுறைகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.
இதுவே ஒவைசி இவ்வாறு செயல்பட்டு இருந்தால் தமிழக ஊடகங்களிலும் கூட முழு பக்க செய்தி வெளியாகி இருக்கும் எனினும் பாஜக அமைச்சரின் இந்த மாபாதக செயல் குறித்து மக்கள் அறிவதில்லை காரணம் இவர்கள் ஆளுங்கட்சி, அதை விடவும் முக்கியமாக, இவர்கள் முஸ்லிம்கள் இல்லை, எனவே தான் தொலைக்காட்சி மோடியாக்களும் இதை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பதில்லை என்கின்றனர் விமர்சகர்கள்.