Modi

பிரதமர் மோடியின் ஈத் பண்டிகை வாழ்த்துகளின் பின்னணி …

ஈத் பண்டிகை மற்றும் இம்மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு முதலியன உலக அளவில் முக்கியமான ஒன்று. அதிலும் மிக அதிகமான அளவில் (20 கோடி முஸ்லிம்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் நாடு நம்முடையது.

பொதுவாக ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் சிறுபான்மை மக்களின் பண்டிகைக்கு அரசு சார்பில் வாழ்த்துக்கள் சொல்வது, விருந்தளிப்பது, அவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொப்பி முதலான அம் மக்களின் அடையாளங்களை அவர்களோரு சற்று நேரம் அணிந்திருப்பது, நடனமாடும் மரபுள்ள நாடுகளில் அவர்களோடு நடனமாடுவது முதலியன ஒரு அடிப்படை ஜனநாயகப் பண்பாக உள்ளது.

இந்தியாவிலும் அப்படித்தான் இருந்து வந்தது – நரேந்திர மோடி பிரதமராகும் வரை. அவர் பதவிக்கு வந்தபின் அரசு சார்பில் நடக்கும் பிரதமரின் விருந்து ரத்து செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தவரை முஸ்லிம் தலைவர்களுக்கு விருந்தளிப்பது தொடர்ந்தது. அது மட்டுமல்ல முகர்ஜியின் அரசியல் இன்று எப்படியோ, அவர் பதவியில் இருந்தவரை முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதை வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறியதில்லை எனவும் கூட வாதம் வைக்கலாம். அவர் அளித்த விருந்துகளிலும் அவரது இப்படியான உரைகள் வரவேற்கத் தக்கனவாக இருந்தன. மிகக் கூர்மையான்வையாகவும் இருந்தன.

குடியரசுத் தலைவராக முகர்ஜி அளித்த விருந்துகளிலும் பிரதமர் மோடி கல்ந்து கொண்டதில்லை.

இந்த ஆண்டு மோடி கொரோனாவுடன் இணைத்து முஸ்லிம் மக்களின் இந்த மிக முக்கியமான பண்டிகை மற்றும் நோன்புக்கு வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார்.

நாமும் நன்றிகள் சொல்வோம்.
இப்படி பிரதமர் மோடி மனம் திருந்தியதன் பின்னணி என்ன?

கொரோனா தாக்குதலை ஒட்டி முஸ்லிம்கள் மீதான ஒதுக்கல்கள், அவதூறுகள் ஆகியன முஸ்லிம் உலகால் கடுமையாக இன்று கண்டிக்கப்பட்டதன் விளைவுதான் இது என்கிறது டெலிகிராபின் இக் கட்டுரை.

ஆக்கம்: அந்தோணிசாமி