மும்பையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்த டெலிவரி பாய் முஸ்லிம் என்பதால் பொருட்களை வாங்க மறுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதவெறி வைரஸ்:
பாசிச பயங்கரவாத சிந்தனை கொண்டவர்களும், வட இந்திய மோடியாக்களும் தொடர் வெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரம் செய்து வருவதன் விளைவால் நாட்டு மக்கள் மத்தியில் மதவெறி வைரஸ் பரவி வருகிறது. அதற்கு ஒரு எடுத்து காட்டாக தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நடந்த சம்பவம்:
மும்பை நயா நகரை சேர்ந்த ஒரு முஸ்லீம் டெலிவரி நபர் (32 வயது) கைகளில் கையுறைகளை, முகத்தில் முகக்கவசம் என போதிய பாதுகாப்புடன் மக்களுக்கு மளிகை பொருட்களை விநியோகம் செய்து வந்தார். கடந்த செவ்வாய் கிழமை, இவர் மீரா சாலையில் அமைந்துள்ள ஸ்ருஷ்டி வளாகத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு மளிகை பொருட்களை விநியோகம் செய்துள்ளார். அவ்வீட்டில் இருந்த பெண்ணும் அதை வாங்கி கொண்டார்.
வாங்கி கொண்ட பொருட்களை சரிபார்த்து கொண்டிருந்த நேரத்தில் பெண்ணின் கணவர் (51 வயது) வந்து பொருட்களை விநியோகம் செய்தவரின் பெயரை கேட்டுள்ளார். பெயரை கேட்டு அவர் முஸ்லீம் என்பதை அறிந்து கொண்டதும் பொருட்களை திரும்பி தருமாறு தன் மனைவியிடம் கூறி உள்ளார். அது மட்டுமின்றி முஸ்லீம்களிடம் இருந்து பொருட்களை வாங்க மாட்டேன் என்றும் அவர் மதவெறி பிடித்து கூறி உள்ளார்.
நான் ஏன் உயிரை பணயம் வைத்து மக்களிடம் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறன், எனினும் இந்த மாதிரியான நெருக்கடியான சமயத்தில் கூட சிலர் இவ்வாறு மதத்தை வைத்து பிரிவினை காட்டுவது மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்கிறார் பொருட்களை டெலிவரி செய்யும் முஸ்லிம் நபர்.
நடந்த சம்பவத்தை முழுவதும் வீடியோவாக பதிவு செய்த அவர் மனம் உடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். வீட்டில் உள்ளவர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.
போலீசார் நடவடிக்கை:
பாதிக்கப்பட்ட அந்த முஸ்லிமும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, போலீசார் உடனே களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட நபரை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 295 (அ) (மத உணர்வை சீர்குலைக்கும் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படல்) பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாக ஆகியுள்ள புதிய இந்தியாவில், சிவ சேனா ஆட்சி செய்யும் மஹராஷ்டிராவில் மத வெறிக்கு சற்றும் இடம் கொடுக்காமல் துரித நடவடிக்கையில் இறங்கிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.