📍ரேபிட் கிட் சோதனை முடிவுகள் துல்லியமான முடிவுகளை தராததால், 2 நாட்களுக்கு சோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
📍இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
📍இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால், இந்த பரிசோதனையின் முடிவில் இருப்பவருக்கு PCR சோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது.
📍ஆனால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்ட பகுதிகளில் Rapid Kit மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே PCR சோதனை மூலம் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களிடம் Rapid kit மூலம் சோதனை செய்தபோது அவை எதிர்மறையான முடிவுகளைத் தந்துள்ளன.
📍90 சதவீதம் துல்லியமான முடிவுகள் கிடைக்க வேண்டுமென ஐ.சி.எம்.ஆர். தெரிவித்திருந்த நிலையில் 5.4 சதவீதம் மட்டுமே துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளதால், Rapid kit சோதனையை நிறுத்தி வைத்துள்ளதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ரகு சர்மா தெரிவித்துள்ளார்.
📍இதுகுறித்து ஐ.சி.எம்.ஆருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், அவர்களின் முடிவிற்காக காத்திருப்பதாகவும், திரு.ரகு சர்மா தெரிவித்துள்ளார்.
📍இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் Rapid kit மூலம் சோதனை செய்வ வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
📍ரேபிட் கிட்களின் தரத்தை ஆய்வு செய்து வருவதாகவும், மீண்டும் அதனை பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் எனவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.