லாக்டவுன் காலத்தில் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டாம் என்று முதலாளிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்ட போதிலும், நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்வான் டீம் பல்வேறு மாநிலங்களில் கிட்டத்தட்ட 12,000 புலம் பெயர் தொழிலாளிகளிடையே ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறது.
அதில் கிடைத்த தகவல்கள் இவை:
- அரசாங்கம் வாக்களித்திருந்தும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு அரசு ரேஷன் இன்னமும் கிடைக்கவில்லை. (இந்த விகிதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. உபியில் 100%, மகாராஷ்டிரா 99%, கர்நாடகா 93%)
- சுமார் 88 சதவிகிதம் பேருக்கு அவர்கள் வேலை செய்யும் இடங்களில் இருந்து இன்னமும் சம்பளம் வழங்கப் படவில்லை.
- ஏப்ரல் 8 வரை கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேருக்கு சமைத்த உணவு எதுவும் வழங்கப் படவில்லை. இந்த விகிதம் சற்றே மேம்பட்டு, ஏப்ரல் 13ம் தேதி 70 சதவிகிதமாக குறைந்தது. (மாநிலவாரியாக உணவு கிடைக்காதவர் விகிதம்: உபி: 66%, கர்நாடகா: 80%, மகாராஷ்டிரா: 58%, தில்லி / ஹரியானா: 66%)
- சர்வே முடிவடைந்த நாள் வரை சுமார் 70% பேரிடம் கைவசம் சராசரியாக 200 ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது.
- சர்வே முடிவடைந்த நாள் வரை சுமார் 50% குடும்பங்களிடம் இரண்டு நாளுக்கான மளிகை மட்டுமே இருந்திருக்கிறது. (உபி: 100%, மகாராஷ்டிரா: 90%, தில்லி / ஹரியானா: 82%)