தினகூலித் தொழிலாளியான ரிஸ்வான் அகமது 22, உபி மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இறந்தார், லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய சமயத்தில் போலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிர் இழந்துள்ளதாக ரிஸ்வானின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தனது பொலிஸ் புகாரில், ரிஸ்வானின் தந்தை இஸ்ராயீல், ஏப்ரல் 15 ம் தேதி மாலை 4 மணியளவில் அம்பேத்கர் நகரில் உள்ள சஜ்ஜாப்பூர் வட்டாரத்தில் அத்தியாவசிய வீட்டு பொருட்களை வாங்குவதற்காக சென்றதாக தெரிவித்துள்ளார். அவர் பசியுடன் இருந்ததால் பிஸ்கட் வாங்கச் சென்றார் என அவரது உறவினர் ஒருவர் கூறினார்.
கொடூர தாக்குதல்:
ரிஸ்வான் உள்ளூர் தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை ஒரு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் சில கான்ஸ்டபிள்கள் தடுத்து நிறுத்தினர் என்று இஸ்ராயீல் கூறினார்.
உபி : 7 மாத குழந்தைக்கு பால் வாங்க சென்ற அனஸை (21) சுட்டு கொன்ற போலீஸ்- அராஜக வெறியாட்டம்!
காவல்துறையினர் தங்கள் வாகனத்திலிருந்து இறங்கி “அவரை லத்திகளால் அடித்தார்கள்” , அதில் தனது மகன் மிகவும் மோசமாக காயமடைந்ததாக இஸ்ராயீல் கூறினார்
எனது மகன் வீட்டிற்கு திரும்பிய போது மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டிருந்தார். கடுமையான காயங்கள் ஏற்பட்டிதிருந்தது. தாக்கப்பட்டதில் உடல் பழுப்பு நிறத்தில் நிறம் மாறி இருந்தது என தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் அழுது கொண்டே கூறினார் இஸ்ராயீல்.
மருத்துவமின்றி தவித்த ரிஸ்வான்:
காவல்துறையினருக்கும், ஊரடங்கு உத்தரவுக்கும் பயந்து, குடும்பத்தினர் ரிஸ்வானுக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்துள்ளனர். எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை அசோபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டனர், அங்கு அவர் அதிகாலை 2 மணிக்கு இறந்தார் என்று இஸ்ராயீல் கூறினார்.
யோகி ஆட்சியில் அதுவும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? :
காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதாக அவனிஷ் குமார் மிஸ்ரா (கூடுதல். எஸ்.பி.) தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
“பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்த பின்னர், குடும்பத்தினரால் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மிஸ்ரா கூறினார்.
தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனது முதல் உபி யில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.