டெல்லி மாநாட்டில கலந்து கொண்டவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருக்கு என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கொரானா வைரசுக்கு குல்லா போட்டு போரவார ஆட்களை எல்லாம் லுங்கிய கழட்டி ஆராச்சியல் இறங்குகிய ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்துத்துவா சங்கிகள் “முஸ்லிம்கள் திட்டமிட்டு கொரோனாவ பரப்புகிறார்கள” என்று பொய் பிரச்சாரங்களை மக்கள் பரப்புகிறார்கள்.
இவர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பிவிடுவதால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்துமக்களால் அப்பாவி முஸ்லிம்கள் தினம்தினம் தாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகிறார்கள்.
கடந்த வாரம் பஞ்சாப் மாநில ஹோஷியார்பூர் மாவட்டத்தின் ஹாஜிபூர் மற்றும் தல்வாரா பகுதிகளில் உள்ள குஜ்ஜார் பழங்குடி முஸ்லீம் மக்களின் பல குடும்பங்கள் இந்து மக்களால் தாக்கப்பட்டு ஊரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்கள் இப்போது வாழ வழியின்றி அகதிகள் போல் காட்டுப் பகுதிகளில் கூடாரம் போட்டு தாங்கி வருகின்றனர். உணவுக்கு சேகரித்து வைத்த பொருள்கள் முடிந்த நிலையில் சொந்த வீடுகளுக்கு செல்லமுடியாமல் பசி பட்டினியாய் காட்டில் இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த பத்திரிகையாளர் குழு அங்கு சென்று முஸ்லீம் மக்களிடம் விசாரித்ததில்.. பழங்குடி முஸ்லீம் மக்கள் கூறுகையில்..
“எங்களுக்கு டெல்லி எங்க இருக்கிறதன்று தெரியாது, நாங்க டெல்லிய பார்த்ததில்லை, நாங்க மாடுகளை மேய்த்து பால் கறந்து விற்று வருகிறோம், இந்த நோய் எங்களால் தான் பரவுகிறதென்று யாரும் பால் வாங்குவதில்லை, மாடுகளை மேய்க்க சென்றால் எங்களை ரோட்டிலே அடித்து சித்திரவதை செய்கிறார்கள், ஊருக்குள் சென்றால் அடித்து விரட்டுகிறார்கள். எங்கள் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை, இங்கே இருப்பவர்கள் எங்களைக் கொல்லும் நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துகிறார்கள்” என்கிறார்.
“நாங்கள் உணவு இல்லாமல் துன்பப்படுகிறோம், அரசு நிர்வாகத்திடமிருந்தும் போதிய உதவி கிடைக்கவில்லை, தாக்குதலுக்கு பயந்து பல குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் வயதானவர் இந்த காட்டில் மூன்று நாட்களாக பசி பட்டினியோடும் அச்சத்தோடு மறைந்து வாழ்ந்து வாழ்கிறோம்.
80 வயது தாயாருக்கு மருந்து வாங்கச் சென்ற போது மருந்துக்கடையில் “நோயைப் பரப்ப வந்தீர்களா?” எனக் கேட்டு விரட்டியடிகிறார்கள்” என்று கூறிய மக்கள்.., தங்கள் கைகளில் ஆதார் அட்டையை தூக்கிக்காட்டி “இதை வைத்திருந்தும் கூட எந்த நன்மையும் விளையவில்லையே” என்று அப்பாவித்தனமாக கூறுகிறார்கள்.
“ஊருக்குள் சென்றால் அடிக்கிறார்கள், மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லாததால் எங்களுக்கு சொந்தமான ஆறு பசுமாடுகள் செத்து விட்டன. அதில் மூன்றை நேற்றே புதைத்து விட்டேன். இதோ இன்னும் மூன்று மாடுகள் என் முன்னே செத்துக் கிடக்கின்றன” என்கிறார் சுராஜ்.
விசாரித்த பத்திரிகையாளர்கள் ஹோஷியாபூர் போலீசு துணை கமிசனர் அப்னீத் ராவத்தை தொடர்பு கொண்ட போது, குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று நாட்களாக பசி பட்டினியில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் எந்த முசுளும்களும் வீடு திரும்பவில்லை. காவிகளை எதிர்த்து காவல்துறையாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.
அந்த பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேரடியாகவே நடத்தபட்டு வருகிறது. ஹோஷியாபூரின் நௌஷேரா ஷிம்லி, கோட்டா, வாஸிரியா, சார்யானா, சிப்போ சாக் போன்ற பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் குருத்வாராக்களின் ஒலிபெருக்கிகளில் “இசுலாமியர்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து” என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கிராமத்தின் சாலைகளில் தடுப்பரண் அமைத்து அப்பகுதி இளைஞர்கள் கைகளில் கட்டை கம்புகளுடன் சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் மற்றும் முசுலீம்களை பார்த்தால் வெறிகொண்டு தாக்குகின்றார்கள்.
உலகெங்கும் கொரோனா வைரசை எதிர்த்து சுகாதாரப் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசி மதவெறி அரசியலை செய்துவருகிறது மோடி அரசும், இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் என்கிறார்கள் இடதுசாரிகள்.
செய்தி ஆதாரம் : த வயர்.