Corona Virus Karnataka

கர்நாடகா: ஆயிரக்கணக்கோனோர் ஒன்று திரண்டு நடத்திய தேர்த்திருவிழா; உறங்கும் அரசாங்கமும் காணாமல் போன மீடியாக்களும்..

பாஜக ஆளும் கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கலாபுராகி மாவட்ட சித்தாபூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சித்தலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த செய்தியை மோடியாக்கள் மக்கள் வரை கொண்டு சேர்க்கவில்லை. நாம் அறிந்தவரை இந்தியாவின் தொலைக்காட்சி ஊடங்கங்களில் இந்த செய்தி வெளியாகவே இல்லை. ஒன்று கூடியவர்கள் தப்லீக் ஜமாத்தினர் இல்லை என்பதால் கூட அவர்கள் செய்தி வெளியிடாமல் இருந்து இருக்கலாம்.

மார்ச் மாத தொடக்கத்தில், இந்தியாவின் முதல் கோவிட் -19 நோய் தொற்று ஏற்பட்டு மரணித்தவர் இதே கலாபுராகி மாவட்டத்தை சேர்ந்தவரே, அப்படி இருந்தும் கூட ஆளும் பாஜக அரசு மக்கள் கூடுவதை தடை செய்யாமல் இருந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

லாக்டவுன் வழிகாட்டுதல்கள் பகிரங்கமாக மீறப்பட்டிருந்தும் கூட அதை உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்காமல், ஊமை பார்வையாளராக வேடிக்கை பார்த்ததற்காக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றது.

முன்னதாக கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ ஊரடங்கு உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தினார். அதே போல உபி முதல்வரும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மத நிகழ்ச்சிகளுக்கு தடை இருந்ததும் கூட அயோத்தியில் கூட்டமாக பூஜையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.