போன மாதம் எனது கடை வழியாக போன பிராமண சமுதாயத்தை சேர்ந்த 85வயது மிக்க பெரியவர் ஒருவர். சிறு உதவியை (பணம், பொருள் உதவி அல்ல) என்னிடம் நாடினார், அதற்கான முயற்ச்சி மேற்கொண்டு அந்த வேலை முடிந்தவுடன் எனது கடைக்கு வந்து என் கையை பிடித்து நன்றி சொன்னார், நான் மெய்சிலிர்த்து போய் நீங்களெல்லாம் இப்படி செய்வதற்கு உங்கள் வேதம் தீட்டு என்று அதற்கு பெயர் வைத்துள்ளார்களே என்று கேட்டேன்…
( குறிப்பு:எனக்கு பிராமண நண்பர்கள்,கஸ்டமர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் யாரும் தீட்டாக நினைக்ககூடியவர்கள் அல்ல)
அதற்கு அவருடைய பதில் நாம் எல்லோரும் #மனிதர்கள் குறைந்த காலமே இந்த உலகத்தில் வாழப்போகும் நாம், நம் முன்னோர்கள்பிரிவினை ஏற்படுத்தக்கூடிய ஜாதிகளை உருவாக்கி அதில் நீ பெரியவன் நீ தாழந்தவன் என்று கூறுபோட்டுவிட்டு போய்விட்டார்கள், அதை அறியாத சிலமுட்டாள்கள் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
நான் பல இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில் குடும்பத்தில் ஒருவராகவும், அதேபோல் அவர்கள் எங்கள் வீட்டில் குடும்பத்தில் ஒருவராகவும் வாழ்ந்த காலமும் உண்டு, இன்றைக்கு உள்ள தலைமுறைகளை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக பிரிவினையை ஏற்படுத்தி உள்ளார்கள், இஸ்லாமியர்களாகிய உங்களிடத்தில் அதிகமா இரக்ககுணம் இருப்பதை நானறிவேன்.
ஆனால் சிலபேர்கள் செய்கிற தவறான செயல்களினால்தான் இஸ்லாம் மதத்தை சம்பந்தபடுத்தி கெட்ட பெயர் ஆக்குகிறார்கள்,
எல்லா மதத்திலும் இதை போல நபர்கள் இருக்கிறார்கள், ஆனால் அது அவர்கள் சார்ந்த மதத்தின் பெயர்வருவதில்லை.
முஸ்லீம்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்பது எனக்கு தெரியும் அதனால் தான் இத்தனைகடைகள் இருப்பதை விட்டுவிட்டு போர்டை பார்த்துவிட்டு உங்களிடம் உதவிகேட்டு வந்தேன் என்று சொல்லி… அன்று நான் கண்ட இஸ்லாமியர்கள் போலவே நீங்களும் இருக்கிறீர்கள் உங்களுக்கு அல்லாஹ் உதவிசெய்வான், எனக்காகவும் உங்கள் அல்லாஹ்விடம் நீங்கள் பிராத்தனை செய்யுங்கள் என்றார்.
அதற்கு நான்சொன்னேன் கடவுள் ஒருவனே அவனை வணங்கும் முறைகள்தான்வேறு…வேறு.. நன்றி ஐயா என்று வழி அனுப்பிவைத்தேன். என்னுடைய போன்நம்பரையும் வாங்கிவிட்டு சென்றார்.
இதை ஏன் தற்சமயம் பதிவாக போட காரணம் என்றால்?
இன்று எனக்கு அந்த பெரியவர் போன் போட்டு தற்சமயம் 144 ஊரடங்கில் என்னுடைய நலத்தையும் விசாரித்துவிட்டு…
தற்சமயம் டெல்லிஜமாஅத் மூலமாகத்தான் கொரோனா நோய் பரவுவதாக ஒரு அப்பட்டமான பொய்களை பரப்புகிறார்கள், முஸ்லீம்களை ஒதுக்கிறார்கள் ஆகையால் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்,
உங்கள் எல்லோருக்கும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன், ஆனால் அந்த நயவஞ்சகர்களை அல்லாஹ் கூடிய சீக்கிரம் தண்டிப்பான் அதை இந்த ஜென்மத்தில் பார்க்கத்தான் போகிறோம் என்று சொன்ன உடனே ஒரு கணம் எனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது…
அந்த பெரியவர் நலமுடன் வாழ பிராத்தனையுடன்.
முஹம்மத் ரபீக்