Islamophobia

ஏர் இந்தியா தனது ஹைதராபாத், மும்பை மற்றும் கொச்சின் விமானங்களில் ஜம்ஜம் நீர் எடுத்து செல்வதை தடை செய்துள்ளது.

Published 08-07-2019 22:23 PM

உடனடியாக அமல்படுத்தும் வகையில் இந்தியாவின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா பயணிகள் ஜம் ஜம் நீர் கேன்கள் எடுத்து செல்வதை அதன் சில விமானங்களில் தடை செய்துள்ளது.

இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் இறுதியான தேதியான செப்டம்பர் 15 வரை இந்தத் தடை நீடிக்கிறது.

ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் குழு AI966 (ஜித்தா / ஹைதராபாத் / மும்பை) மற்றும் AI964 (ஜித்தா – கொச்சின்) விமானங்களில் ஜம் ஜம் நீர் கேன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்து உள்ளது.

“விமான நிலையத்தில் கடைசி நிமிட அசவ்கரியங்களை தவிர்ப்பதற்காக இந்த தகவலை உங்கள் சகாக்கள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் பரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்” என்று ஏர் இந்தியா தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.

ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கலீஜ் டைம்ஸுக்கு ஜம் ஜம் நீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். அந்த அதிகாரி கூறியதாவது , “விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குறைந்த இடவசதி காரணமாகவும், ஏர் இந்தியாவின் குறுகிய வடிவமைப்பு விமானத்தில் ஜம்ஜம் புனித நீர் கேன்களை எடுத்துச் செல்ல பயணிகளை அனுமதிப்பதை நாங்கள் நிறுத்திவிட்டோம்.” எனினும் ஏர் இந்தியாவின் பெரிய ரக வடிவமைப்பு கொண்ட விமானங்களில் இத்தடை இல்லை என்று கூறினார்.

ஏர் இந்தியா அதிகாரி ,பிரபு சந்திரன் தெலுங்கானா டுடேவிடம் கூறுகையில், “யாத்ரீகர்கள் 10 கலிட்டர் அளவிலான ஜம்ஜம் தண்ணீரை செக்-இன் லக்கேஜாக கொண்டு செல்ல முன்னர் அனுமதிக்கப்பட்டனர்,தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது”.

மேலும் அவர் கூறுகையில் “நாங்கள் பயணிகளுக்கு அதிக இடமளிக்க விரும்புவதால், ஹைதராபாத் மற்றும் கொச்சின் விமானங்களில் ஜம்ஜம் நீர் எடுத்து செல்வவதை தற்காலிகமாக தடை செய்துள்ளோம் .” என்றார்.

இருப்பினும், இந்த விளக்கம் ஹஜ் யாத்ரீகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை.. “ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்க முடியும்” என்று திரு.ஏ.கான் என்ற ஒரு பயணி கூறினார், அவர் இந்த மாத இறுதியில் மும்பையில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்கிறார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கும் ஹஜ்ஜின் போது, யாத்ரீகர்கள் தொடர்ச்சியான மத கிரியைளில் ஈடுபடுகிறார்கள் , அவற்றில் ஒன்று மக்காவில் உள்ள புனித ஜம் ஜம் கிணற்றில் இருந்து நீர் அருந்துவது.

ஜம் ஜம் நீருக்கான கிங் அப்துல்லா திட்டத்தின் பிரதான ஆபரேட்டரான மக்காவின் தேசிய நீர் நிறுவனம் (NWC) தரப்பில் கூறப்பட்டதாவது : தற்போதைய 10 லிட்டர் கேன்களுக்கு பதிலாக இனி 5 லிட்டர் கேன்களாக வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த செய்தி கலீஜ் டைம்ஸ், கல்ப் நியூஸ் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களால் பிரசுரிக்க பட்டது.