America Corona Virus

கொரோனா மருந்து வழங்க இந்தியாவை மிரட்டிய ட்ரம்ப், பணிந்த மோடி ..

அமெரிக்கா முழுவதும் கொரோனா காட்டு தீ போன்று பரவி வருகிறது. இதுவரை3,67,758 பேர் கொரோனவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்,10,981 உயிர் இழந்துள்ளனர். இதனால் ஆரம்பத்தில் இருந்தே நோயை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ட்ரம்ப் தலைமையிலான அரசு கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது.

“மிரட்டல் விடுப்பதற்கு பெயர் நட்பு அல்ல. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அவர்களின் தேவைப்படும் நேரத்தில் உதவ வேண்டும், ஆனால் உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க செய்திட வேண்டும்.” ராகுல் காந்தி

மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் “தக்க பதிலடியை சந்திக்க நேரிடலாம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் தொனியில் கூறி இருந்தார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா பாதிப்புக்கு ஆளானோருக்கு வழங்கப்படுகிறது.

எனவே இந்திய அரசு அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது, எனினும் தற்போது ட்ரம்ப் விடுத்த மிரட்டலை தொடர்ந்து மோடி அரசு ட்ரம்ப் கேட்டுக்கொண்ட மருந்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், ஏற்றுமதியை அனுமதிப்பதன் மூலம் மோடி அரசு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது

ட்ரம்ப் 130 கோடி இந்திய மக்களை அவமதித்து இருக்க மோடி அரசு மிரட்டலுக்கு எப்படி பணியலாம், ? இந்திய மக்களுக்கே போதுமான அளவில் மருந்து இல்லாமல் இருக்க எப்படி ஏற்றுமதி செய்யலாம்?

https://twitter.com/Vishj05/status/1247393293681315842

இது தான் 56″ ஆ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .