இந்தியாவில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியுடன் தொடங்கப்பட்ட ஷாஹீன் பாக் போராட்டம் நடைபெற்று வந்த இடத்தை அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீசார் அடித்து நொறுக்கினர்.
புல்டோசர்கள் கொண்டு வந்த அங்கு போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கட்டமைப்புகளை அழித்தொழித்தது டில்லி போலீஸ். இதன் மூலம் கடந்த 101 நாட்கள் நடைபெற்று வந்த போராட்டத்தை கொரோனாவை காரணம் காட்டி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மோடி அரசு.
இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென வந்த டெல்லி போலீசார் அங்கு இருந்தவர்களை பலவந்தமாக அகற்றினர். ஆறு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட 9 பேரை போலீசார் கடுங்காவலில் எடுத்துள்ளனர். டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் பிற பகுதிகளில் CAA க்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த – ஜாஃப்ராபாத் (வடகிழக்கு டெல்லி) மற்றும் துர்க்மேன் கேட் (பழைய டெல்லி) ஆகியவையும் இன்று காலை டெல்லி போலீசாரால் நீக்கப்பட்டன.
ஷாஹீன் பாகில் டில்லி அரசு பரிந்துரைத்த அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலும் ..
இவ்வாறு அதிரடியாக டெல்லி போலீசார் நடந்து கொண்டதற்கு கண்டனம் வலுத்து வருகிறது.