டெல்லி படுகொலைகளின் போது 19 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக டெல்லி வக்ஃப் வாரியத் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ வுமான அமனத்துல்லா கான் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்கள் புனர்நிர்மான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் தொடங்கிய படுகொலைகள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது, இதில் குறைந்தது 14 மசூதிகள் மற்றும் ஒரு சூஃபி தர்கா ஆகியவை இந்துத்துவ கும்பலால் எரிக்கப்பட்டன.
பள்ளிவாசலைகளுக்குள் நுழைந்த பாசிச கும்பல், பள்ளியில் இருந்த அனைத்து புத்தகங்களையும் கிழித்து எரிந்து, பொருட்கள் அனைத்தையும் உடைத்து எரிந்து, கண்ணில்பட்ட எதையுமே துவம்சம் செய்த பின்னரே பள்ளிவாசலை எரித்துள்ளனர்.
இவ்வாறு வெறிச்செயலில் ஈடுபட்ட போது “ஜெய்ஸ்ரீ ராம்” என கோஷங்கள் எழுப்பியதை பார்த்ததாக உள்ளூர்வாசிகள், இந்துக்கள் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
பள்ளிவாசலைகளுக்கு இடையிடையே பலவேறு கோவில்கள் இருந்தும் ஒன்றும் கூட தாக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எரிக்கப்பட்ட 19 பள்ளிவாசல்களில் 14 மசூதிகள் மற்றும் ஒரு சூஃபி தர்காவின் புகைபடங்கள் கீழே..
சயத் சாந்த் பாபா தர்கா, சாந்த் பாக்
மதீனா மஸ்ஜித், சிவ் விஹார்
ஆவ்லியா மஸ்ஜித், சிவ் விஹார்
தை-அபா மஸ்ஜித், சிவ் விஹார்
மவ்லா பக்ஷ் மஸ்ஜித், அசோக் நகர்
சாந்த் மஸ்ஜித், அசோக் நகர்
முபாரக் மஸ்ஜித், கர்ஹி மெண்டு
கம்ரி மஸ்ஜித், கம்ரி
மீனா மஸ்ஜித், பாகீரதி விஹார்
மதீனா மஸ்ஜித், மிலன் கார்டன்ஸ்
அல்லாஹ்வாலி மஸ்ஜித், முகுந்த் நகர்
ஜன்னதி மஸ்ஜித், கோகல்பூரி
டயர் மார்க்கெட் மஸ்ஜித், கோகல்பூரி
பாத்திமா மஸ்ஜித், ஷெர்பூர் சோக்
ஃபாரூகியா மஸ்ஜித், பிரிஜ்புரி
நன்றி, புகைப்படங்கள் : அஞ்சலி மோடி, ஸ்க்ரோல்