காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்தார். முன்னதாக 17 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கர்நாடகா சென்ற எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் திங்கள்கிழமை இரவு சுமார் 20 மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி மீண்டும் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.