Published Jul 8, 2019 19:11 pm
♦♦இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி அகில பாரத் இந்து மகா சபை சார்பில் அவ்வமைப்பின் கேரளா தலைவர் ஸ்வாமி சாய் ஸ்வரூப் நாத் என்பவரால் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்து மகா சபாவிற்கு கடும் பின்னடைவாக ஆகியுள்ளது.
♦♦ பாதிக்கப்படுபவர்கள் வந்தால் தான் இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், சம்பந்தம் இல்லாத நபர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரிக்க இயலாது என்றும் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே ஊடங்கங்களில் இது குறித்து செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது வழக்கின் நோக்கத்தை காட்டி விட்டது. இது ஒரு “cheap publicity” என்று கடுமையாக நீதிபதிகள் கண்டித்து மனுவை தள்ளுபடி செய்தனர். End.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.
இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்’என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.நூல் : புகாரி 900, 873, 5238
பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் கூறியுள்ளனர்.நூல் : புகாரி 865, 899
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.
மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.