டெல்லியில் இந்துத்துவ பயங்கரவாத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட சிஏஏ எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை வெறியாட்டத்தில் டெல்லி வடகிழக்கு பகுதியான ப்ரிஜ்புரியை விட்டு காலி செய்யும் முஸ்லிம்கள் கொடுத்த வாக்குமூலம்…
டெல்லி வன்முறைக்கு இலக்காக்கப்பட்ட இருவேறு முஸ்லிம் பெண்கள் குழு கொடுத்த கள ரிப்போர்ட்டின் படி இது முழுக்க முழுக்க முஸ்லிம் மக்களை குறிவைத்து பலியாக்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது. முன்னதாக சிஏஏவினை எதிர்த்து போராட்டம் நடத்திய சாந்த்பாக் பெண்களும் சிவ விகார் பகுதியை சேர்ந்த பெண்களும் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை கூற முன்வந்தனர்… இது குறித்து தி வயர் என்ற ஊடகம் ஆக்கம் வெளியிட்டுள்ளது
கேடுகெட்ட காரியத்தில் ஈடுபட்ட சிஏஏ ஆதரவாளர்கள்:
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என கத்தி கொண்டே முன்னேறி வந்த சிஏஏ ஆதரவாளர்கள், தங்கள் பேண்டை கழற்றி மர்ம உறுப்பை எங்களுக்கு காட்டிய நிலையில்.. இதோ எடுத்துக்கொள்ளுங்கள் ஆஸாதி என கூறினர்.
இவை போலீசாரின் முன்னிலையே நடந்தது. கலவரம் செய்ய வருவோரை முன்னால் விட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக டெல்லி போலீஸ் நின்றுகொண்டது. போலீசும் வந்து எங்களை முதலில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து போகும்படி தான் அச்சுறுத்தியது.. நாங்கள் மறுக்கவே வலதுசாரி குண்டர்கள் முன்னேறிவந்து , எங்களை மானபங்கப்படுத்தினர்.
போலீசாரும் கூட்டு:
சிஏஏ ஆதரவாளர்களிடம் இருந்து பெண்களாகிய எங்களை காப்பாற்ற ஆண்கள் முன்னே வந்து நின்றவுடன் , அவர்கள் ஆண்களை நோக்கி கற்களை ஏறிய ஆரம்பித்து விட்டனர். பின்புறத்தில் இருந்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வைத்து தாக்கினர். பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. எங்களிடம் கற்களும், இல்லை. கல்லெறியவும் இல்லை.
கலவரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது எங்களுக்கு தொண்டை எரிச்சலும் கண் பார்வையில் எரிச்சலும் ஏற்பட்டது. போராட்டத்தில் கர்ப்பிணிகள், முதிய பெண்கள், குழந்தைகள் இருப்பதை கூட போலீஸ் கவனத்தில் கொள்ளவில்லை. பிப்ரவரி 24, மதியம் உண்டான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு நாங்கள் மட்டுமல்லாது எங்வளுக்காக குரல்கொடுக்க வந்த சமூக போராளிகள் பலரும் இலக்காயினர்.
அதன் பிறகு இரு தரப்பிலும் கல்வீச்சுகள் நடைபெற்றது. போராட்டத்தில் பங்குபெற்ற பலரும் கண்ணீர் புகை குண்டுகளின் தாக்கத்தால் அவதியுற்ற காரணத்தால் போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கல்வீச்சில் பலரும் ஈடுபடவில்லை. இதனை பயன்படுத்தி இந்துத்துவ வெறியர்கள் கூச்சலிட்டதை எங்களால் கேட்க முடிந்தது. “வெளியில் இழுத்து தெருவுக்கு கொண்டு வாருங்கள் அவர்களை, அடிப்போம் மிதிப்போம் ” என அவர்கள் அலறிக்கொண்டிருந்தனர்.
முஸ்லிம் பெண்களின் அவலநிலை:
இதனிடையே முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவும், கற்பழிப்பு சம்பவங்களும் தொடர்ந்த காரணத்தால் அவர்களில் பலர் சிவ விகாரில் இருந்து முஸ்தஃபாபாதிற்கு தப்பியோடிய சம்பவங்களும் அரங்கேறின. போலீசும் தன் பங்கிற்கு எங்கள் மீது கல்லெறிந்துகொண்டும் லத்தி சார்ஜ் செய்துகொண்டும் எங்களை துரத்தியது. வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்த பல பெண்கள் மீது வீடுகளில் கல்லெறியப்பட்டது.
வாசல் மற்றும் சன்னல் கதவுகளை உடைத்துக்கொண்டு பயங்கரவாதிகள் உள்ளே புகுந்தனர். வீடு வாசல் உடைமைகள் என அத்தனையும் போட்டுவிட்டு நாங்கள் தப்பித்து ஓடினோம்.
வீட்டை உடைத்து உள்ளே புகுந்தவர்களுக்கு பயந்து மகளையும் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் ஏறி ஓடிய பெண் ஒருவரை கால்களை ஒடித்துள்ளனர். அவரது மகளும் இதில் கடுமையான தாக்குதல்களுக்குள்ளானார்.
அவரை கொண்டு மருத்துவமனை சென்ற போது கலவரக்காரர்களில் சிலர் கூறினர், இவர்கள் கத்துவா செய்தவர்கள் (கத்துவா என்பது விருத்தசேதனம் செய்துகொண்ட முஸ்லிம்களை குறிக்கும் சொல்), இவர்கள் பாகிஸ்தானுக்கு ஓட வேண்டும்.. இவர்களுக்கு மருந்து கொடுக்க கூடாது, சிகிச்சை செய்யக்கூடாது என கூறிக்கொண்டே எங்களை நெறுங்கினர்.
இங்கே எங்களுக்கு அருகே குடியிருந்தவர்கள் தான் அவர்களுக்கு எது முஸ்லிம் வீடு எது இந்து வீடு என காட்டிக்கொடுத்தனர். எங்களது உயிர் என்ன அத்தனை துச்சமா? முஸ்லிம் என்றால் வாழத்தகுதியில்லாதவரா? இந்துக்கள் தான் இங்கே மனிதர்களா? எங்களது எல்லா வாழ்வாதாரத்தையும் சர்வநாசம் செய்துவிட்டார்கள்.
வீட்டில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த எங்களது தொழில்களை அழித்துவிட்டார்கள். எங்களை அடித்து துன்புறுத்தி எங்களது ஆடைகளை கிழித்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட பிறகும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்காமல் அவர்களது கீழாடையை கழற்றி காட்டி இந்த சுதந்திரம் வேண்டுமா? என மிக கேவலமாக நடந்து கொண்டார்கள்.
பாசிச பயங்கரவாதிகளின் அராஜகம்:
எங்களது குழந்தைகள் அனைவரும் பயந்து நடுங்கி வீட்டினை விட்டு வெளியேற மறுக்கின்றனர். பட்டினியாக இருந்தாலும் சரி எங்களுக்கு வெளியே போக வேண்டாம் என அழுகின்றனர் என்றார் அதில் ஒரு பெண்.
கலவரக்கொடூரங்களை நேரில் கண்ட ஒன்பதாம் வகுப்பு சிறுமி கூறுகிறார். எங்களுடைய பள்ளிகளையும் பாடப்புத்தகங்களையும் கூட அவர்கள் மிச்சம் வைக்கவில்லை. இனி பரிட்சை வரும் போது நாங்கள் என்ன செய்வோம்.. வீட்டின் மொட்டை மாடிகளுக்கு ஏறி ஓடி தப்பிக்க இருந்தவர்களை, இரக்கமில்லாமல் கழுத்தறுத்து கால்வாயில் வீசினார்கள், போலீஸ் எங்களுக்கு உதவி செய்யவில்லை மாறாக கலவரக்காரர்களுக்கு துப்பாக்கிகள் கொடுத்து உதவியதை என் கண்களால் பார்த்தேன் என்கிறார் மிரட்சியுடன்.
மோடியும் அமித்ஷாவும் இந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆறுதல் கூறவில்லை. நேரில் வரதேவையில்லை. டிவியில் கூட ஒரு வார்த்தை பேச முடியாத. டெல்லியில் மக்கள் இங்கே அழிந்து கொண்டிருக்கையில் அலகாபாதிற்கும், கொல்கத்தாவிற்கும் சென்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதாக நாடகமாடுகிறார்கள். மக்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டு யாருக்காக நாடாளப்போகுறார்கள் என கேட்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
ஆக்கம்: நஸ்ரத்