Karnataka States News

பாஜக தான் தற்போது கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள திடீர் “ராஜினாமா மழைக்கு” காரணம் – சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படும் ஆதாரங்கள்.


Published:8th Jul 19 17:50

கடந்த சனிக்கிழமை 13 காங்கிரஸ் மற்றும் ஜனதா தால் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கர்நாடக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர் திடீர் ராஜினாமாக்களுக்கு பின்னால் பாஜக தான் இருக்கிறது என்று பரவலாக சமூக வலைதளங்களில் பதிவுகளை காண முடிகிறது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு தடயங்களும் காணக்கிடக்கின்றன.


ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களை கர்நாடகாவில் இருந்து மும்பை சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து சென்ற விமானம் பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தை சார்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்குப் பின்னால் பாஜக தான் உள்ளது என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


 தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல மேலதிகமாக 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஜனதா தால்  அமைச்சர்களும் மந்திரி சபையிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஆன நாகேஷ் என்பவரும் தனது ராஜினாமாவை அளித்துள்ளார் இவரும் தற்போது 13 எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மும்பை சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


கர்நாடக  முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா , மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் போன்ற பாஜக தலைவர்கள், தற்போது நடைபெற்று வரும் அமைச்சர்கள் தொடர் ராஜினாமாவிற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூரி வரும் நிலையில் தற்போது பிஎஸ் எடியூரப்பா வின் பி.ஏ சந்தோஷ், (இன்று)ராஜினாமா செய்த சுயேட்சை வேட்பாளர் நாகேஷுடன்  பெங்களூருவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்லும் முன் உண்டான புகைப்படம் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.


 நாகேஷுக்கும் சந்தோஷ்க்கும் என்ன தொடர்பு ?அவர் ஏன் நாகேஷுடன் விமானத்தில் ஏறி செல்ல வேண்டும் இதிலிருந்து பாஜகதான் அமைச்சர்கள் ராஜினாமாகளுக்கு பின் உள்ளது சந்தேகமின்றி உறுதியாகிறது என்பன போன்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரவலாக காண முடிகின்றது.
பாஜக தான் ஆட்சி அமைக்க வேண்டி ஜனநாயகத்தை  சீரழிக்கும் மோசமான குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

மேலும் சொகுசு விமான பயணங்கள், ஆடம்பர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது எல்லாம் யார் பணத்தில் ? என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்