பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது, எனினும் மக்களின் அடிப்படை தேவையான மருத்துவத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் நிதின் படேல், குஜராத் முழுவதும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட 1.06 லட்சம் குழந்தைகளில் 15,013 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேள்வி கேட்கப்பட்டதால் தான் இதுவும் வெளியானது இல்லையென்றால் குஜராத் மாடல் பாணியில் இதுவும் கூட மூடி மறைக்க பட்டிருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகள் அதிக அளவில் இறந்துள்ளது அகமதாபாத்தில் தான். மொத்தம் 34,727 கைக்குழந்தைகள் இறந்துள்ளனர். வதோதராவில் 2,362 மற்றும் சூரத்தில் 1,986 குழந்தைகள் இறந்துள்ளனர் என துணை முதல்வரின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் சுகாதாரத்துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து போட பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர், மோடி மற்றும் அமித் ஷா உணர்ச்சியற்றவராக இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிஜேபி முதல்வர் விஜய் ரூபானி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.