உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 3000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், லச்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதை தடுக்க விஞ்ஞானிகளே இரவு பகலாக போராடி வரும் நிலையில், கொரோனா வைரஸ் விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் இந்து மகாசபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்ரபாணி
“கொரோனா என்பது ஒரு வைரஸ் அல்ல, உயிரினங்களை (மிருகங்களை) காக்க வந்த ஓர் அவதாரம். அசைவ உணவை சாப்பிடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் விதமாகவே இந்த அவதாரம் தோன்றியுள்ளது” என்று அகில இந்திய இந்து மகாசபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்ரபாணி கூறியுள்ளார்.
நரசிங்க அவதாரம் எப்படி அசுரனை கொன்றாரோ, அதே போல “சீன மக்கள் விலங்குகளை சித்திரவதை செய்யக்கூடாது, சைவமாக மாறிட வேண்டும்” என்பதற்காகவே இந்த தண்டனை என அவர் மேலும் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி, சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் “கொரோனாவின் சிலையை உருவாக்கி மன்னிப்பு கோர வேண்டும்”. அசைவ உணவை உண்ணும் அனைத்து சீன மக்களும் “எதிர்காலத்தில் எந்த அப்பாவி உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும், அப்படி செய்தால் கொரோனாவின் கோபம் குறைந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.
நான் சொல்லும் இந்த வழிமுறையை பின்பற்றினால் கொரோனா அதன் அவதார உலகத்திற்கே திரும்ப சென்று விடும் என அவர் பகீர் தகவல் அளித்துள்ளார்.
தெய்வங்களுக்கு அஞ்சுபவர்களும், பசு பாதுகாவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.