பாஜக வின் இந்துத்துவா கொள்கையை ஆரம்பத்தில் விமர்சித்து வந்தது போல அல்லாமல் கெஜ்ரிவால் முற்றிலும் மாறிப்போய் உள்ளார் என குற்றச்சாட்டுகள் நிலவி வரும் வேளையில், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புற படுத்த வேண்டும் என கூறினார், பிறகு அவர் பதவியேற்ற நிகழ்ச்சியில் மோடியின் ஆசிர்வாதம் வேண்டி நிற்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இவ்வாறாக ஒவ்வொன்றாக அரசியல் காய்களை நகர்த்தி வரும் கெஜ்ரிவால், தற்போது எங்குமே மோடி, அமித் ஷா வை விமர்சிப்பதே இல்லை. அவர் ஒரு தீவிர ஹனுமான் பக்தராக தன்னை கட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் இந்துத்துவா வாக்குகளை தன் பக்கம் தக்கவைக்க முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அவரது கட்சிக்காரர்களும் தலைவர் வழியில் கருத்துக்களை கூற ஆரம்பித்துள்ளனர். “ராமர் கோயில் வளாகத்தில் அனுமன் ஜியின் பிரமாண்ட சிலை கட்டப்பட வேண்டும் என கருதுகிறேன், ஏனெனில் ஹனுமான் ஜி கடவுள் ராமுக்கு மிகவும் பிடித்தமானவர். ஹனுமான் ஜி தன்னலமற்ற சேவையின் சின்னம்” என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவரப் பரத்வாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என தெளிவு படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கூட இவர் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.