ஒதிஷாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒதிஷா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது.
மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒதிஷா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும்.
எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் மோடி அரசின் கருப்பு சட்டங்களான சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக போராடி கொண்டிருக்க, பாமக நிறுவுனர் ராமதாஸ் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதால் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.