காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் நாட்டு எம்பி டெப்பி ஆபிரகாம்ஸுக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது மோடி அரசு. இ-விசா பெற்று கொண்டு இந்தியா வருவதற்கான அனைத்து தேவையான ஆவணங்களையும் கொண்டு டில்லி விமான நிலையம் அடைந்துள்ளார் டெப்பி.
ஆனால் விசா நிராகரிக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறி, அங்கிருந்து வலுக்கட்டாயமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான செல்வி ஆபிரகாம்ஸ் தனக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி குறிப்பிடுகையில் ” நான் ஒரு கிரிமினல் குற்றவாளியை போல நடத்தப்பட்டேன்” என கூறியுள்ளார்.
“காலை 8.50 மணி அளவில் நான் விமான நிலையம் அடைந்தேன். மற்ற பயணிகளை போலவே நானும் இ-விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் இமிக்ரேஷன் கவுண்டரில் கடவுசீட்டுடன் நின்று கொண்டிருதேன். எனது முறை வந்த உடன் எனது பயண ஆவணங்களை அதிகாரியிடம் வழங்கினேன். அந்த அதிகாரி தனது கணினி திரையைப் பார்த்து தலையை ஆட்ட ஆரம்பித்தார்.
என் விசா நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறினார். பிறகு 10 நிமிடங்கள் கழித்து திரும்பிய அவர், என்னிடம் கோபத்துடன் கத்தி பேச ஆரம்பித்தார் பேசினார். நான் ஒரு கிரிமினல் குற்றவாளியை போல நடத்தப்பட்டேன். என்னை பயணிகள் வெளியேற்ற படும் ( Deportee Cell ) பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு என்னை உட்கார சொன்னார், ஆனால் நான் உட்காரவில்லை, அவர் என்னை நடத்தும் விதம் அனைவர்க்கும் தெரியட்டும் என்றே அப்படி செய்தேன். உடனே என் நண்பருக்கு அழைத்தேன், அவர் பிரிட்டன் தூதரகத்தை தொடர்பு கொண்டார், எனினும் அதற்குள் வலுக்கட்டாயமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டேன்” என தனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவம் குறித்து டெப்பி கூறுகிறார்.
டெல்லியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க வந்ததாக டெப்பி தெரிவித்தார். இந்நிலையில் ஒரு பெண்ணை பார்த்து மோடி அரசு நடுங்குவதாக கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.