BJP Crimes Against Women Uttar Pradesh

உபி : பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு !

உபி : பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் 6 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக உபியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று (10-2-2020) படோஹி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஆசை வார்த்தை காட்டி மோசம்:

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 2007 இல் இறந்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகனை 2014 இல் சந்தித்துள்ளார் அந்த பெண். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி தன்னை பல முறை சீரழித்ததாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாக படோஹி காவல் கண்காணிப்பாளர் ராம் பதான் சிங் தெரிவித்துள்ளார்.

காமவெறி குடும்பத்தினரா ?:

கடந்த 2017 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது எம்.எல்.ஏ.வின் மருமகன் ஒரு மாத காலத்திற்கு தன்னை படோஹி ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அப்போது பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் அவரது குடும்பத்தினரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாக காவல் கண்காணிப்பாளர் ராம் பதான் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.