மும்பை : ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். அவர் உபெர் காரில் பயணித்தவாறு நாட்டில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து அலைபேசியில் பேசிக்கொண்டு வந்துள்ளார். இதை கவனித்த வாகன ஓட்டுநர், பயணியின் தனியுரிமையை மீறும் வகையில் அவரது அனைத்து பேச்சுக்களையும் பதிவு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஓட்டுநர் ரோஹித் சிங், காவல் நிலையத்தின் முன் நிறுத்தி, பணத்தை எடுக்க வேண்டும் என்று கூறி நிறுத்தியுளளார். சில நிமிடங்கள் கழித்து, சிங் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் திரும்பியுள்ளார்.
கீழ்த்தரமாக நடந்து கொண்ட சிஏஏ ஆதரவாளர், ஓட்டுநர் :
கவிஞர் சாண்டாக்ரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கடும் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளார். ஓட்டுநர் ரோஹித் உடனே கைது செய்யுமாறு போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளார். எனினும் கவிஞர் மீது எந்த வித குற்றமும் இல்லாததால் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளனர் போலீசார். கவிஞர் பாப்பாடித்யா எந்த வித தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருந்தும் கீழ்த்தரமாக ஓட்டுநர் நடந்து கொண்டதையடுத்து உபெர் அவரது ஓட்டுநர் கணக்கை தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.
பெருந்தன்மை கொண்ட சிஏஏ எதிர்ப்பாளர், கவிஞர்
மேலும் கவிஞர் சர்க்காரை தரக்குறைவாகவும், வன்முறை பேச்சுக்களையும் கொண்டு பேசியுள்ளார் ரோஹித். எனினும் அவருக்கு எதிராக தான் வழக்கு தொடுக்க போவதில்லை, ஏனெனில் இதனால் அவரது வாழ்க்கையே பாழாகிவிடும் என கவிஞர் கூறியுள்ளார்.
அதே நேரம் இந்த இழி செயலை செய்ததற்காக பாஜக வினர் ஓட்டுநருக்கு பாராட்டி மாலை அணிவித்து கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.