Indian Economy

‘ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைக்க பெறாத மாநிலம் தமிழகம் மட்டுமல்ல’ – நிர்மலா சீதாராமன் ..

மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரியின் நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக மாநில அரசாங்கங்கள் மத்திய அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைத்தபாடில்லை.

கடந்த 2017-18 நிதி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) நிலுவைத் தொகை ₹ 4,073 கோடி. இதை விரைவில் வழங்குமாறு தமிழகத்தின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகம் மட்டும் தனித்து விடப்படவில்லை:

இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை பற்றி நேற்று நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “ஜிஎஸ்டி நிலுவை தொகை பெறுவதில் தமிழகம் மட்டும் தனித்து விடப்படவில்லை (அனைத்து மாநிலங்களும் இதே நிலையில் தான் உள்ளன). பட்ஜட்டில் ஏற்கனவே கூறப்பட்டதை போல விரைவில் 2 தவணைகளில் நிலுவை தொகை வழங்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் :

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவருவது தொடர்பான பிரச்சினையில், திருமதி சீதாராமன், இந்த விவகாரத்தில் மாநிலங்கள் முதலில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்றார். ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு, ஜிஎஸ்டி சட்டத்தில் அதற்கேற்ப திருத்தம் செய்யப்படும் என திருமதி சீதாராமன் மேலும் கூறினார்.