“ஒரே பாலின தம்பதிகள் தங்கள் திருமணத்தை இந்திய சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள முடியுமா, அப்படியானால், அதன் விவரங்கள் அளிக்கவும். இல்லையென்றால், அதற்கான காரணங்களை கூறவும் ” என ராஜ்ய சபாவில் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார்.
ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்கும் சட்ட பிரிவு 377 ஐ ரத்து செய்து, உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 2018 இல் தீர்ப்பு வழங்கியது குறிபிடத்தக்கது.