Crimes Against Women Hindutva

‘ஜே.என்.யுவின் யோகி’ என அறியப்படும் இந்துத்துவா மாணவர் பாலியல் வழக்கில் கைது !

ஜே.என்.யுவின் சமஸ்கிருத மற்றும் இண்டிக் பாட பிரிவில் பி.எச்.டி பயிலும் மாணவரான ராகவேந்திர மிஸ்ரா பெண் மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

வழக்கு:

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 354 (ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது) மற்றும் பிரிவு 323 (தன்னிச்சையாகக் பிறரைகாயப்படுத்தல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவராக அறியபடுபவர். இதனால் இவர் ஜேஎன்யு வின் “யோகி” என்று அழைக்கப்படுகிறார்.

படிக்க: டில்லி: சிஏஏ எதிர்ப்பு வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்த பைசலை மதுபாட்டிலால் தாக்கிய பாசிச கும்பல்

அரும்பாடு:

‘இந்து பாதுகாப்பு லீக்’ என்று பெயரில் செயல்பட துவங்கிய இவர் ஜே.என்.யு மத்திய நூலக வளாகத்தில் யாருக்கும் இடையூறின்றி சில சமயம் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதை தடை செய்ய வேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டு வருபவர்.

மேலும் அவர் இந்த ஆண்டு ஜே.என்.யு.எஸ்.யூ தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். எனினும் இருப்பதிலேயே மிகவும் குறைவான வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

மேலும் அறிய