அகில் பாரதிய இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் தனது இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
கள்ளக்காதல் அம்பலம்:
இந்த வழக்கு தொடர்பாக ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி ஸ்மிருதி ஸ்ரீவஸ்தவா, அவரது கள்ளக்காதலன் தீபேந்திரா மற்றும் டிரைவர் சஞ்சித் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜித் பாண்டே வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மூவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர், எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய – ஜிதேந்திரா இன்னும் கைது செய்யப்படவில்லை.
பாசிச பயங்கரவாதம்:
இந்நிலையில் வழக்கம் போல பாசிச கும்பல் இதை செய்தது முஸ்லிம்கள் தான், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சிஏஏ வை ரஞ்சித் ஆதரித்து வந்ததால் தான் கொல்லப்பட்டார் என்ற பல விதங்களில் வெறுப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
போலீஸ் கமிஷ்னர் இம்முறை உண்மையை கூறி விட்டடதால் பாசிச கும்பல் தற்போது வாயடைத்து போயுள்ளது.
ரொக்கப்பரிசு அறிவிப்பு:
தாக்குதல் நடத்தியவர் ஒரு சால்வையில் தன்னை மூடிக்கொண்டு , நடந்தே வந்துள்ளார். சந்தேக நபரைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டனர். இது குறித்த மேலதிக தகவல்களை தெரிவித்தால் ரூ .50,000 ரொக்கப்பரிசு என அறிவித்தனர்.
ஏற்கனவே விவாகரத்து வழக்கு :
ஸ்மிருதி, ரஞ்சித் பச்சனிடமிருந்து விவாகரத்து செய்ய விரும்பியதாகவும், அவர்களது வழக்கு 2016 முதல் குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் பாண்டே கூறினார். ஸ்மிருதி, தீபேந்திராவை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் ரஞ்சித் பச்சன் ஸ்மிருதியை விட்டு பிரிய விரும்பவில்லை.
“கடந்த ஜனவரி 17 அன்று, ரஞ்சித் ஸ்மிருதியை சந்தித்து முகத்தில் அறைந்துள்ளார், இது தான் ஸ்மிருதியை கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரமூட்டியுள்ளது” என்று அவர் கூறினார்.
விசாரணையின் போது, பயங்கரவாத கோணம் உட்பட சாத்தியமான அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரித்ததாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
இரண்டு திருமணம் செய்திருந்த இந்துத்துவ தலைவர்:
“இந்த வழக்கில் பண பிரச்சனைகள் இல்லை, சொத்து தகராறுகள் இல்லை, பயங்கரவாத கோணமும் இல்லை என்று நாங்கள் கண்டறிந்தோம். ஸ்மிருதிக்கு தீபேந்தி இருவரிடையே உறவு இருந்து வந்துள்ளது. நான்கு கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட ரஞ்சித் பச்சனை விட்டு வெளியேற விரும்பினார் ஸ்மிருதி.
தொழில்நுட்ப மற்றும் மின்னணு கண்காணிப்பு மூலம், ஸ்மிருதி, தீபேந்திரா, டிரைவர் சஞ்சித் மற்றும் துப்பாக்கி சுடும் ஜிதேந்திரா இடையேயான தொடர்பை நாங்கள் கண்டறிந்தோம், “என்று போலீஸ் கமிஷனர்கூறினார்.