வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பாகிஸ்தான் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி தான் பிரதமர் மோடி பேசியுள்ளார். இது நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பும் ஒரு நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
“பிரதமர் மோடியின் பாணி நாட்டை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதாகும். அவர் காங்கிரஸ், ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார், ஆனால் முக்கிய பிரச்சினைகள் பற்றி வாய்திறப்பதில்லை”
“இன்றைய மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மை, வேலை இழப்புகள் தான், நாங்கள் இது குறித்து பல முறை பிரதமரிடம் கேட்டுவிட்டோம், ஆனால் இது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. முன்னதாக, நிதியமைச்சர் ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார், ஆனால் அவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து வார்த்தை கூட பேசவில்லை, ” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்..