Corruption Maharashtra States News

கடும் வறட்சியிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில பாஜக சிவசேனா கட்சியினர்- பிரபல ஆங்கில ஊடகம் ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி.

Published 04-07-2019,21:47 PM

முறைகேடாக தன்னார்வு நிறுவனங்களாக (NGO) பதிவு செய்துகொண்டு நாளொன்றுக்கு 14 லட்சம் ரூபாய்வரை விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர் பாஜக மற்றும் சிவ சேனா கட்சியினர்.

கடுமையான வறட்சிக்கு உள்ளாகியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநில அரசு ஏழை எளிய விவசாயிகள் நலன் காக்கும் விதத்தில் கால்நடைகளை பராமரிக்க வறட்சி நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும் அந்த பணத்தை முறைகேடாக கொள்ளை அடித்து வருகின்றனர்.

வறட்சி சூழ்நிலையை சமாளிக்க இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அம்மாநில அரசு மாடுகளை பராமரிக்க 1400 முகாம்களை உருவாக்கியது. வறட்சியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த “பீட்” மாவட்டத்திற்கு மட்டும் 933 முகாம்கள் அமைப்பது என நிர்ணயிக்கப்பட்டது. அதில் 876 முகாம்கள் உருவாக்கப்பட்டது.இதில் 545 மாட்டுத்தீவன முகாம்கள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு இதன் மூலம் 3,49,106 கால்நடைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

NGO களின் சேவை :

அரசாங்க வழிகாட்டுதலின்படி இந்த முகாம்களை நிர்வகிக்கவும் கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வழங்கவும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அழைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து பல்வேறு என்ஜிஓக்கள் (ngo) சேவை வழங்க முன்வந்தன.

பெரிய விலங்குக்கு நாளொன்றுக்கு 15 கிலோ தீவனம் தேவைப்படும் என்பதால் அதற்கு 90 ரூபாய் என்றும் சிறிய விலங்கு என்றால் ஒரு நாளைக்கு 7.5 கிலோ தீவனம் தேவைப்படும் என்பதால் 45 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்து அரசால் NGO களுக்கு பணம் வழங்கப்பட்டு வந்தது.

பீட் மாவட்ட உள்ளூர் பாஜக அரசியல்வாதி ராஜேந்திர மாஸ்கே மற்றும் சிவசேனாவின் மாவட்ட தலைவர் குண்டலிக் காண்டே ஆகிய இருவரும் பினாமி பெயர்களில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கால்நடை முகாம்களில் பலவற்றை கட்டுப்படுத்தி வந்துள்ளனர். மேலும் முகாம்களில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகமாக காண்பித்தும் அதேசமயம் கால்நடைகளுக்கான குறைந்தபட்ச தீவனம் மற்றும் தண்ணீரை கூட சரியான முறையில் வழங்காமல் இருந்துள்ளனர் என்று ஆங்கில நாளிதழான HUFFPOST இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி வெளியே தெரியவர பீட் மாவட்ட கலெக்டர் ஆஸ்டிக் குமார் பாண்டே இதுகுறித்து விசாரித்து ஆய்வு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இதில் ஒவ்வொரு நாளும் (உண்மையில் இல்லாத)16,000 கால்நடைகளை கூடுதலாக கணக்கில் காட்டப்பட்டு அதற்கு பணமும் பெற பட்டுவந்தது அம்பலமானது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 7.2 லட்சம் முதல் 14.4 லட்சம் வரை விவசாயிகளுக்கு சேரவேண்டிய தொகையை பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் ஊழல் செய்தது சந்தேகமின்றி உறுதியானது.

maharashtra fodder scam

நாடு முழுவதும் மாடுகளை நேசிப்பவர்களாகவும், பசு காவலர்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்ளும் பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்களே மாட்டுத் தீவன ஊழலில் ஈடுபட்டு இருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“மக்கள் இங்கு மிகவும் ஏழ்மையிலும் வறட்சியிலும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உள்ளூர் பாஜக மற்றும் சிவசேனா கட்சி பிரமுகர்கள் இப்படி ஊழலில் திளைத்திருப்பது மிகவும் வேதனையான ஒரு விஷயம் என்று ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் அஜித் தேஷ்முக் கூறினார்.

மாட்டுத் தீவன ஊழல் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும் இதில் ஈடுபடுபவர்கள் பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் என்பதால் ஆளும் அரசாங்க கட்சிக்கு எதிராக செயல்பட முடியாமல் இருந்துள்ளனர்.

கலெக்டர் அதிரடி!

மாவட்ட கலெக்டர் அஸ்திக் குமார் பாண்டே உத்தரவின்படி பல்வேறு கால்நடை முகாம்களில் சோதனை நடைபெற்றது அதில் சிவசேனா தலைவர் காண்டே என்பவருக்கு சொந்தமான முகாமில் அதிகாரிகள் சோதனையிட சென்ற பொழுது அங்கு லைட் அனைக்கப்பட்டது. லைட் போட சொல்லியும் காண்டே வின்
ஆட்கள் அதைக் கேட்கவில்லை.

Image credit Facebook :பீட் மாவட்ட சிவசேனாவின் மாவட்ட தலைவர் குண்டலிக் காண்டே

ஆனாலும் கூட அதிகாரிகள் டார்ச் ஒளியை கொண்டு ஒவ்வொரு விலங்காக சோதனையிட்டனர் சோதனை நெடுகிலும் பல்வேறு மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

சோதனை முடிவில் அங்கு 863 மாடுகள் மட்டுமே இருந்தன. ஆனால் இதே முகாமில் 1607 மாடுகள் இருப்பதாக கணக்கு காண்பித்து பணம் பெறப்பட்டு வந்தது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மேலும் 18 கால்நடை முகாம்களில் அதிரடி சோதனை க்கு உத்தரவிட்டார். இவை அனைத்தும் காண்டே என்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அடுத்த தினம் முதலே 16,000 மாடுகள் குறைவாக கணக்கு காட்டப்பட்டன.

ஊழல் நடந்திருப்பது வெட்டவெளிச்சமான காரணத்தினால் ஊழலுக்கு உதவிய இரண்டு தாசில்தார் மற்றும் ஒரு அதிகாரியை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: “எங்கெல்லாம் உண்மையான சமூக ஆர்வலர்கள் இவ்வாறான முகாம்களை நடத்துகிறார்களோ அங்கெல்லாம் எந்தவித ஊழலும் நடப்பது இல்லை, எந்தவிதமான குளறுபடியும் இருப்பதில்லை ஆனால் எப்பொழுது ஒரு அரசியல் கட்சி இதில் நுழைகிறதோ அப்போதே ஊழலும் ஊடுருவி விடுகிறது”.

பல மாதங்களாக நடந்து வந்த இந்த ஊழல் குறித்து எந்தவித ஊடகத்திலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை அவ்வளவு ஏன் ஒரு செய்தியாக கூட வெளியிடப்படவில்லை.Huffpost india வை தவிர இந்தியா டுடே மட்டுமே இது குறித்து செய்தி வெளியிட்டது குறிப்பிட்ட தக்கது.

காங்கிரஸின் ஆட்சி காலத்திலும் சரி அதற்குப் பிறகும் சரி காங்கிரஸார் செய்த ஊழல்கள் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்தன ஆனால் பாஜக செய்யும் ஊழல்கள் மட்டும் மக்களை சென்றடைவதில்லை இரண்டுக்கும் காரணம் ஊடகங்களே என்பதை மறுப்பதற்கில்லை.