சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் முதல் சிறையில் உள்ள அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.
வழக்கு பிரிவு?
அவர் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376C யின் கீழ் செய்யப்பட்டார். தன் பொறுப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணியாற்றும் ஓர் அலுவலரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணிடம் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆசைக்கு காட்டித் தன் வசம் இழுக்கச் செய்து தம்முடன் உடலுறவு மேற்கொள்ளும்படி செய்வது குறித்து பேசுவதே 376C. இந்த சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தந்தையாக விதிக்கப்பட வேண்டும்.
எனினும் தண்டனை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே சாமியார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துவிட்டார். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
சின்மயானந்திடமிருந்து ரூ .5 கோடி பணம்பறிக்க முயன்றதாக 23 வயது சட்ட மாணவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் டிசம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
யார் இந்த சாமியார் சின்மயானந்தா?
சின்மாயானந்த் ஷாஜகான்பூரின் சுவாமி சுக்தேவானந்த் முதுகலை கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். இந்த கல்லூரில் படித்த மாணவி தான் சாமியார் மீது பாலியல் வழக்கை தொடுத்தவர்.
சின்மயானந்த் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் (1999-2004) மத்திய அமைச்சராக இருந்தார். அவர் உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் தொகுதியில் இருந்து மக்களவையில் உறுப்பினராக தேர்ந்துடுக்கப்பட்டவர்.
சின்மாயானந்த் ஷாஜகான்பூரில் ஒரு ஆசிரமம் வைத்து நகரத்தில் ஐந்து கல்லூரிகளை நடத்தி வருகிறார். ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷிலும் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டில், சின்மயானந்த் தனது ஆசிரமத்தில் உள்ள ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்.