சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்க, இந்தியா, பங்களாதேஷை சேர்ந்த மாணவர்களை அரசாங்கங்கள் அக்கறையுடன் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்று விட்டன, எனினும் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க தவறி உள்ளது.
மாணவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யவில்லை. சீனாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உணவு கூட கிடைக்க வழியின்றி பாகிஸ்தான் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டால் மிகவும் மோசமாக அவர்கள் பேசுவதாக மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்திய மாணவர்கள் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவதை கண்டு இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தான் மாணவர் கூறும் இந்த காணொளி வைரலாகி வருகிறது.
மேலும் இந்திய அளவில் பாகிஸ்தான் மாணவர்கள் குறித்த ஹாஷ்டாக் 2ம் இடத்தில ட்ரெண்ட் ஆகி வருகிறது.