கேரளாவின் கும்ப்லாவில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவர்களான ஹசன் சையத் (13) மற்றும் முனாஸ் (17) ஆகியோர் மீது ‘கிரண்’ என அடையாளம் காணப்பட்ட ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளான் .
மதரசா மாணவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்ததை சகித்து கொள்ள முடியாமல், அவர்கள் வம்புக்கு இழுத்த கிரண், அவர்கள் இருவரையும் நோக்கி ” பாகிஸ்தானுக்கு திரும்ப போ” என கத்தி கொண்டே மாணவர்களை தாக்க துவங்கியுள்ளான். அவ்வழியே சென்ற மக்கள் கிரணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து கேரள கௌமுடி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 27 அன்றின் இரவில் நடந்துள்ளது..
கேரளா, பம்ப்ரானாவின் கும்ப்லா பகுதியில் உள்ள தாருல் உலூம் எனும் மதரஸாவில் இரு மாணவர்களும் பயின்று வருகின்றனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கும்பலா மாவட்ட கூட்டுறவு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.
அருகில் வசிப்பவர் ஒருவரின் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு மதரஸாவுக்கு திரும்பி கொண்டிருந்த இரண்டு மாணவர்களையும் ஒரு கார் வழிமறித்துள்ளது, காரில் இருந்து இறங்கிய கிரண் “நீங்கள் ஏன் தொப்பி அணிந்துள்ளீர்கள்? சிஏஏ சட்டத்தை ஏற்கிறீர்களா? இல்லையா?” என கேட்டு மிரட்ட துவங்கியுள்ளான் . மேலும் பாகிஸ்தானுக்கு திரும்ப போங்கடா என கத்திகொண்டே தாக்க ஆரம்பித்துள்ளான் கிரண்.
போலீசார் அவனது வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில் பயங்கர ஆயுதங்களை அவன் வைத்திருந்ததும் அம்பலம் ஆகியுள்ளது.