Published: 3.7.2019 (7.40pm)
மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான ஐவரில் ஒருவரான தில்பர் கூறியதாவது :
“நாங்கள் ஐவர் குட்டையில் மீன் பிடித்து கொண்டு இருந்தோம். பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர்.அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியவராக பாஜக கட்சியை சேர்ந்த ஊர் பஞ்சாயத்து உறுப்பினரது கணவர் இருந்தார். எங்கள் அருகே வந்த அவர்கள் திடீரென எங்களை நோக்கி நீங்கள் அனைவரும் மாடுகளை திருடும் கொள்ளைக்காரர்கள் தானே என்று கூறி பிரச்சனை செய்தனர் நாங்கள் அதை எதிர்த்து , இங்கு மீன் பிடிக்க மட்டுமே வந்தோம் நாங்கள் மாட்டு கொள்ளையர்கள் எல்லாம் கிடையாது என்று கூறினோம் ஆனால் அவர்கள நாங்கள் கூறியதை ஏற்காது எங்களை கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர் பிறகு எங்களை ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு கட்டாயப்படுத்தினர்.”
Image credit :news18.com
“நாங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூற முடியாது என்று கூறினோம் மேலும் எங்களை விட்டு விலகிச் செல்லுமாறு கூறினோம் இதனால் அவர்கள் மேலும் கோபமுற்றறு எங்களை காட்டுத்தனமாக அடிக்கத் தொடங்கினர். ஒரு கூட்டமே எங்களை முற்றிலுமாக சூழ்ந்து கடுமையாக தாக்கினர்.”
பாஜக வழக்கம் போல மறுப்பு!
ஆனால் இவ்வாறான சம்பவத்தை அம்மாவட்ட பாஜக பொது செயலாளர் பாசுதேவ் சர்கார் மறுத்துள்ளார்.பிரச்சனை ஏற்பட்டது ஏதோ பணத்தகராறில் தான் , இதை திரிணாமுல் காங்கிரசார் மறைக்கின்றனர் என்று தன் பக்க கதையாக கூறினார்.
கடுமையாக தாக்கப்பட்டவர்களில் ஒருவரான முக்தார் கூறுயதாவது:
“எங்களை கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கும் பொழுது நாங்கள் எழுப்பிய சப்தத்தை கேட்டு தொலைவில் இருந்த கிராமத்தார் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை நோக்கி வந்தனர் அவர்கள் வருவதைக் கண்டு பாஜக கட்சியினர் ஓட்டம் பிடித்தனர் ஓடி செல்லும்பொழுது எங்களைக் குறித்து காவல் நிலையத்தில் ஏதேனும் வழக்குப் பதிவு செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியபடி ஓட்டம் பிடித்தனர்”.
மருத்துவமனையில் அனுமதி:
கடுமையாக தாக்கப்பட்ட அந்த ஐவரை பொதுமக்கள் அருகில் இருந்த கரன்திகி மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு நிலமை மோசம் அடையவே அதில் இருவரான தில்பர் மற்றும் முக்தார் ஆகியோரை ராய்கஞ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிங்கர்தாஹா போன்ற சிறுபான்மை சமூகம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை குறித்த விவரங்களை திரட்டி வருகிறோம் விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து டெலிகிராப் இந்தியா என்ற ஊடகத்தை தவிர வேறு எந்த ஒரு ஊடகமும் (3.7.19 மாலை 8 மணி வரை) செய்தி வெளியிடவில்லை.தமிழில் newscap மட்டுமே செய்தி வெளியிட்டுள்ளது.