சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுக்க பரவி வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகளை சிகிச்சை அளிப்பதற்கு என்று மதுரை அரசு மருத்துவ மனையில், சிறப்பு வார்டு திறப்பு விழா நடைபெற்றது
ரங்கோலி கோலம் வரைந்து, ரிப்பன் வெட்டி, சாக்லேட்டுகள் விநியோகித்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாபவர்களை அனுமதிக்க வென்று பிரத்யேக சிறப்பு வார்டை மதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
ஏதோ மகிழ்சிகரமான நிகழ்வு போல சுவீட் கொடுத்து கொண்டாடி திறப்புவிழா நடத்துவதா என கூறி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.