கடந்த 2002 ஆம் ஆண்டு, மோடி ஆட்சியின் போது நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பயங்கரவாதிகளுக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது, இன்று.
அவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான மத்திய பிரதேசம் சென்று “சமூக சேவை” செய்ய வேண்டும் என்பது ஜாமினில் உள்ள நிபந்தனையாகும். 33 முஸ்லிம்களை உயிருடன் எரித்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 17 பயங்கரவாதிகளும் “சமூக மற்றும் ஆன்மீக சேவைகளை” செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
“வேலையை ஏற்பாடு செய்யுங்கள்” – மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:
17 பயங்கரவதிகளையும் 2 குழுக்களாக பிரித்து அவர்களின் ஒரு சாரார் இந்தூரிலும் மற்றொரு சாரார் ஜபல்பூரிலும் தங்கி இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த 17 பேருக்கும் உரிய வேலையை ஏற்படுத்தி தருமாறும் மத்திய பிரதேச அரசை கேட்டுக்கொண்டுள்ளது உச்சநீதிமன்றம்.
தொடர் அறிக்கை அனுப்ப வேண்டும்:
குற்றவாளிகள் தினமும் ஆறு மணிநேர சமூக சேவை செய்வதை உறுதி செய்ய மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஜபல்பூரில் உள்ள மாவட்ட சட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளது நீதிமன்றம். மேலும் அவர்களின் நடத்தை குறித்து முறையான அறிக்கையை வழங்கி வருமாறும் மாநில சட்ட பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி:
கடந்த 2002 பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் உள்ள சபர்மதி எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதில் இந்து ரயில் பயணிகள் இறந்தனர். விசாரணை எல்லாம் நடைபெறும் முன்னரே இதை முஸ்லிம்கள் மீது பழி சுமத்திய பாசிச கும்பல் 2000க்கும் நெருக்கமான முஸ்லிம்களை படுகொலை செய்தது. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அதை குறித்து இன்றளவும் பல பாஜக தலைவர்கள் பெருமையாகவும் அச்சுறுத்தும் முகமாகவும் பேசி வருவது கூட உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
அந்த கலவரத்தின் ஒரு பகுதியாக தான் குஜராத்தின் சர்தார்புரா கிராமத்தில் 33 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு வீட்டில் பயந்து பதுங்கி இருந்த அந்த அப்பாவி முஸ்லிம்களை உயிருடன் எரித்தது பாசிச பயங்கரவாத கும்பல். இந்த வழக்கு தொடர்பாக தான் 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் 17 பேரை குற்றவாளிகள் என்றும் போதிய ஆதாரம் இல்லை என்ற காரணம் சொல்லி 14 பேரை நிரபராதிகள் என்றும் விடுதலை செய்தது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது..