காஷ்மீர் மக்களின் துயரம்:
காஷ்மீர் மக்களின் உரிமையான 370 சட்டப்பிரிவை அம்மாநிலத்துடன் கலந்து பேசாமல் அம்மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மோடி அரசு நீக்கம் செய்தது. அன்று முதல் இன்று வரை 160 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள மக்கள் சொல்லொன்னா துயரை அனுபவித்து வருகின்றனர்.
கோடிக்கணக்கான தொழில்துறைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இணையதள முடக்கம். சின்னஞ்சிறு சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் எந்த வித வழக்கும் சரியான முறையில் பதியப்படாமல் இந்திய முழுவதிலும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளது மோடி அரசாங்கம்.
உமர் அப்துல்லாஹ் புகைப்படம்:
இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வரும் மத்திய எம்பி யுமான உமர் அப்துல்லா முகம் நிறைய தாடியுடன் கூடிய ஒரு புகைப்படம் வெளியானது. பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்த அந்த புகைப்படம் பலரது கண்டனத்தை பெற்றது. மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கே இந்த நிலை என்றால் அங்குள்ள பாமர மக்களுக்கு என்ன நிலையாக இருக்கும் என்று அனைவரையும் கேள்வி எழுப்ப வைத்தது.
மமதா, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அவரது இந்த புகைப்படத்தை பதிவிட்டு வருத்தமும், மோடி அரசுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
இழிவான காரியத்தை செய்த தமிழக பாஜக:
இந்நிலையில் ஒரு மனிதாபிமானமற்ற கேவலமான காரியத்தை செய்துள்ளது தமிழக பாஜக. தமிழநாடு பாஜக வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உமர் அப்துல்லாவை டேக் செய்து ” உங்கள் ஊழல் நண்பர்கள் எல்லாம் ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்க நீங்கள் மட்டும் இப்படி இருப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது என கூறி ஏளனம் செய்துள்ளது தமிழக பாஜக.
இதில் மிகவும் கீழ்த்தரமான விஷயம் என்னவென்றால் பாஜக பதிவிட்ட அந்த புகைப்படத்தில் அமேசான் இணையத்தளத்தில் உமர் அப்துல்லாஹ்வுக்கு முகசவரன் செய்ய ரேசரை வாங்கி அவரது வீட்டுக்கு அனுப்புவது போல் பதிவு செய்துள்ளது.
அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் அனுபவிப்பது. இதற்கு பெயர் தான் பாசிசம்.
பாஜக வை அனைவரும் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தவுடன் 1 மணி நேரத்திற்குள் டீவீட்டை டிலீட் செய்து விட்டது பாஜக.
இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறை இல்லை.
வேண்டுமென்றே திட்டமிட்டு இவ்வாறு போட வேண்டியது பிறகு நீக்க வேண்டியது, இது ஒரு வாடிக்கையான விஷயம் பாஜாக வுக்கு என சிலர் கிண்டலும் மற்றும் சிலர் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.