Indian Economy

ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் விற்க மோடி அரசு முடிவு – வாங்க முன்வருபவர்களுக்கு அழைப்பு..

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களில் 100% பங்குகள் மத்திய அரசு கைவசம் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் முழு பங்கையும் ஏலம் விட்டு விற்பதற்கு வேண்டி அழைப்பு விடுத்துள்ளது மோடி அரசாங்கம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கையும் வாங்க முன்வரும் ஏலதாரர்கள், இந்நிறுவனங்களின் மீதுள்ள மொத்த கடன் சுமையான 58,000 ஆயிரம் கோடியில் ₹23,000 ஆயிரம் கோடிகளை ($3.26 billion) சுமக்க வேண்டும். முன்னதாக கடந்த 2018ல் மோடி அரசு ஏர் இந்தியாவை விற்க முன்வந்த போது அதை வாங்க ஒரு ஏலதாரர் கூட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மார்ச் 17 ஐ இறுதி நாளாக அறிவித்துள்ளது அரசாங்கம்.